இலங்கை செய்திகள்

முச்சந்தியில் வைத்து சம்பந்தர் சுமந்திரனுக்கு இறுதிக்கிரியை

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முச்சந்தியில் வைத்து சம்பந்தர் சுமந்திரனுக்கு இறுதிக்கிரியை செய்யப்பட்டது. கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியா தபால் நிலையத்திற்கு அருகாமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தின் ஒரு வருட நிறைவு நாள் இன்று(24-02-2018) கவனயீர்ப்பு போராட்டத்துடன் மேற்கொள்ளப்பட்டது. வவுனியா கந்தசாமி கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்கள் ஆலயத்தின் முன்பாக ஒன்றுகூடி பதாதைகளில் பொறிக்கப்பட்டிருந்த தமது பிள்ளைகளின் புகைப்படங்களை பார்த்து ஒப்பாரி வைத்து அழுதனர். இதனையடுத்து […]

இலங்கை செய்திகள்

2 பிக்குகள் கைது : குருநாகலில் சம்பவம்

சிறுவர் இல்லத்தில் இருக்கும் 12 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினர் என்றக் குற்றச்சாட்டில், பிக்குகள் இருவர் உட்பட 8 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குருநாகல், ரஸ்ணாயகபுர, உடஹேதகம பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த சிறுமிகளே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 8 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகளே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 32 தடவைகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள​னரென, விசாரணைகளிலிந்து தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட பிக்குகள் இருவரும் 16 மற்றும் 17 வயதுகளைச் […]

உலகசெய்திகள்

ரோஹிஞ்சா முஸ்லிம்களின் 55 கிராமங்கள் அடியோடு அழிப்பு

மியான்மரில் ரோஹிஞ்சாக்கள் வாழ்ந்து வந்த கிராமங்கள் அடியோடு அழிக்கப்பட்டது செயற்கைகோள் படங்களின் மூலம் தெரியவந்துள்ளதாக பிரசார குழுவான ‘ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்’ தெரிவித்துள்ளது. ஏற்கனவே கலவரத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 55 கிராமங்கள், புல்டோசர் கொண்டு அடியோடு அழிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை செய்திகள்

மகளின் வாழ்க்கையை, சீரழித்த தந்தை 22 வருடங்களுக்கு பின் தண்டனை

தனது 11 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கு 12 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கம்பஹா பிரதேசத்தை நபரொருவருக்கே 22 வருடங்களுக்கு பின்னர் கம்பஹா மேல் நீதிமன்றத்தால் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சபை பேருந்து பரிசோதகராக கடமையாற்றிய 57 வயதான நபரே இந்த குற்றச்செயலை புரிந்துள்ளார். சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், மகளுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி […]

இலங்கை செய்திகள்

பெற்றோலுக்கு தட்டுபாடில்லை, மக்களே ஏமாறாதீர்கள்

எதிர்வரும் நாட்களில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருப்பதாக பொய்யான தகவல்களை சிலர் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்பிக் கொண்டிருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. தற்போது நாட்டில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லையென்றும், எரிபொருள் விநியோகம் எதுவித பாதுப்பும் இன்று இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களை குழப்பி நாட்டில் பெற்றோல் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கு சிலர் எடுக்கும் இந்த முயற்சிகளுக்கு எமாற வேண்டாம் என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

இலங்கை செய்திகள்

உறுதியற்ற நிலைக்கு நாடு, செல்வதை அனுமதிக்காதீர்கள்: சம்பந்தன்

நாட்டை உறுதியற்ற நிலைக்குச் செல்ல அனுமதிக்காமல், அரசாங்கத்தை உறுதிப்படுத்த துரிதமான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்துக்கு வந்திருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சந்தித்துப் பேசினார். தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும், புதிய அரசியலமைப்பை வரைவதற்கும் உறுதியான அரசாங்கம் ஒன்றை உருவாக்குவது முக்கியம் என்றும் சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது வடக்கின் அபிவிருத்தி தொடர்பாகவும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இலங்கை செய்திகள்

இலங்கையில் இனப்பதற்றமும், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களும் நீங்கவில்லை – ஹுசேன்

சிறிலங்காவில் பொறுப்புக்கூறலை மேற்கொள்வதற்கான ஏனைய வழிகளை ஆராயும்படி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அழைப்பு விடுத்துள்ளார். வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடருக்குச் சமர்ப்பித்துள்ள சிறிலங்கா தொடர்பான அறிக்கையிலேயே அவர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். 2015ஆம் ஆண்டில் இருந்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பொறிமுறைகளுடனான சிறிலங்கா அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான ஈடுபாட்டையும் செயிட் […]

இலங்கை செய்திகள்

நாளை ஞாயிற்றுக்கிழமை -25- அமைச்சரவை மாற்றம்

நாளை ஞாயிற்றுக்கிழமை -25- அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், இதில் பங்கேற்க வருமாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மூலமாக இத்தகவல் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கிடைத்தது

உலகசெய்திகள் தொழில்நுட்பம்

சக்திவாய்ந்த நில நடுக்கங்கள் ஏற்படலாம் : ஆய்வு முடிவுகள்

அமெரிக்காவின் 2 விஞ்ஞானிகள் செய்த ஆய்வு முடிவுகள் உண்மையாகும் பட்சத்தில் இந்த ஆண்டு அதைத் தொடர்ந்து 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கங்கள் பூமியில் அதிக அளவில் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளது. கொலராடோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ரோஜர் பில்ஹாம், மோன்டானா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ரெபேக்கா பெண்டிக் ஆகியோர் நிலநடுக்கம் தொடர்பாக ஓர் ஆய்வினை மேற்கொண்டனர். அதில் கடந்த கால நில நடுக்கங்களையும் அவை ஏற்பட்ட சாத்தியக்கூறுகளையும் ஆய்வு செய்தனர். இதில் பூமி சுற்றிவரும் […]

இந்தியா

பரிசு பொருள் வெடித்ததில், புது மாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி

திருமணத்தின் போது வழங்கப்பட்ட பரிசு பொருளை பிரித்து பார்த்தபோது, மர்ம பொருள் வெடித்து புது மாப்பிள்ளை உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒடிசா மாநிலத்தின் பொலிங்கர் மாவட்டத்தில் உள்ள பட்நாகர் நகரை சேர்ந்தவர் சவுமியா சேகர் சாஹூ. இவருக்கும் ரீமா சாஹூ என்பவருக்கும் கடந்த 18-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 21-ம் தேதி நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் புதுமண தம்பதிக்கு ஏராளமான பரிசு பொருட்கள் குவிந்தன. இந்நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தங்களுக்கு […]