மிக முக்கிய பதிவுகள்

நம்மை எல்லாம் சிரிக்க வைத்த நாகேஷ் பற்றிய சில தகவல்கள்.

இவரின் பிறந்த தினம் செப்டம்பர் 27

*நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ். கன்னட பிராமண குடும்பத்தில் 1933-செப்டம்பர் 27-ம் தேதி பிறந்தவர்.
*வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும் என்ற வெறியுடன், சாதிக்காமல் வீடு திரும்ப மாட்டேன் என்று கூறி சென்னைக்கு வந்த நாகேஷ் துவக்க காலத்தில் பல்வேறு கஷ்டங்களைஅனுபவித்துள்ளார்.


*சென்னையில் மேற்கு மாம்பலத்தில் ஒரே அறையில் வாலி மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் தங்கியிருந்தார்.

*சிறிது காலம் ரெயில்வேயில் பணியாற்றினார். ஆனால் அவருக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை.

*ரெயில்வேயில் பணியாற்றிய போது அங்கு நடைபெற்ற ஒரு நாடகத்தில் வயிறு வலியால் துடிக்கும் நோயாளியாக நடித்தார்.

*அவரது நடிப்பை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட எம்ஜிஆர் வெகுவாக பாராட்டினார்.

 


*அதன் பின்னர் சின்ன சின்ன வேடங்களில் நாடகங்களில் நடித்து வந்தார்.

*பின்னர் தயாரிப்பாளர் பாலாஜி உதவியுடன் அவர் சினிமாவில் நடிக்க வந்தார்.

*ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேடங்களில் அவர் நடித்துள்ள போதிலும் இன்றும் திருவிளையாடல் படத்தில் அவர் நடித்ததருமி வேடம் எல்லோர் மனத்திலும் நீங்காத இடம்பெற்றது.

*பிழைப்புக்காக அவர் ஓட்டல் ஒன்றில் சர்வராகவும் வேலை செய்துள்ளார் (பின்னாளில் இதுவே சர்வர் சுந்தரமானது).

*புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அன்புக்குப் பாத்திரமாகி, அவரது பெரும்பாலான படங்களில் நடித்தவர் நாகேஷ்.

*இடையில் சில காலம் இருவருக்கும் ஒரு பிரிவு வந்தாலும், மீண்டும் நாகேஷை அரவணைத்துக் கொண்டார் எம்ஜிஆர்.

*பின் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நாகேஷ்காகவே ஒரு பாத்திரத்தை உருவாக்கினார் அப்படத்தின் இயக்குநரான எம்ஜிஆர்.

*குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி மிகவும் உடல் பாதித்த நிலையில் அவர் அதிலிருந்து மீண்டு வர உதவியவர் எம்ஜிஆர்.

*எம்ஜிஆர், சிவாஜி (திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் விதிவிலக்கு!)படங்களில் காமெடியனாக நடித்துப் புகழ்பெற்றாலும், நடிகர் நாகேஷ் பட்டை தீட்டப்பட்ட வைரமாக ஜெலித்தது கே. பாலச்சந்தர் மற்றும் சிறீதர் ஆகியோரது படைப்புகளில்தான்.

*காதலிக்க நேரமில்லை படம், நாகேஷ் நகைச்சுவையில் ஒரு மைல் கல்.

*ஒரு சாதாரண காட்சியை, வெறும் பாவனைகளில்,உச்சரிப்பின் மூலம் த்ரில்லர் காட்சியாக எப்படிக் காட்டுவது என திரைப்பட இயக்குநர்களுக்கே பாடம் நடத்தியிருப்பார் நாகேஷ் (ஸ்ரீதரின் கைவண்ணம்!).

*கமல் ஹாசனின் பிற்காலப் படங்கள் அனைத்திலுமே நாகேஷ்க்கு மறக்க முடியாத பாத்திரங்கள்.

*அபூர்வ சகோதரர்கள் மூலம் ஒரு விதத்தில் நாகேஷின் பைனல் இன்னிங்ஸை ஆரம்பித்து வைத்தவரே கமல்தான் என்றாலும் மிகையில்லை.
*மைக்கேல் மதனகாமராஜன், நம்மவர் என அந்தப் பட்டியல் தசாவதாரம் வரை தொடர்ந்தது.

*குறிப்பாக மகளிர் மட்டும் படத்தில் பிணமாக அவர் ‘நடித்த’ ஒரு காட்சியைப் பார்த்து ஹாலிவுட் நடிகர்களே வியந்து போனதாக கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்தார்.

*நம்மவர் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய அளவில் சிறந்த துணை நடிகருக்கா விருது நாகேஷ்க்கு கிடைத்தது.

*அவருக்கு மூன்று மகன்கள். ஆனந்தபாபு மட்டுமே திரையுலகுக்கு வந்தார். மற்றவர்கள் வேறு தொழில்கள் செய்து வருகின்றனர்.

*கிறீத்தவ பெண்ணை மணந்த காரணத்தால் குடும்பத்தால் ஒதுக்கப்பட்ட பிராமணர்

*வசந்தமாளிகை, திருவிளையாடல் போன்ற பிரபலமான திரைப்படங்களால் சரித்திரம் படைத்தவர் நாகேஷ்.

*அதன் பின்னர் வந்த நாகேஷ் சார்லி சாப்ளின் போல உடலினாலும், வசனத்தாலும் நடித்து சரித்திரம் படைத்தார்.

*நகைச்சுவை நடிகராக இருந்த நாகேஷ் கே. பாலசந்தரின் படங்களில் நடிக்க ஆரம்பித்தபோது நகைச்சுவைக்கு அப்பால் குணசித்திர வேடங்களில் பெரிய முத்திரை பதித்தார்.

*சர்வர்சுந்தரம், ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான், தாமரை நெஞ்சம், மேஜர் சந்திரகாந்த் போன்ற படங்கள் நாகேஷின் குணசித்திர நடிப்பிற்கு நல்ல எடுத்துக்காட்டுக்களாக அமைந்தன.

*நகைச்சுவை நடிகர்களில் சந்திரபாபுவிற்குப் பிறகு நடனத்தில் சாதனை படைத்தவர் நாகேஷ்தான்.

*அவர் எடுத்த கடினமான நடனஅசைவுகளை அவருடன் நடித்த மற்றய நடிகைகளால் நெருங்கவே முடியாமல் இருந்த காரணத்தால் தனியான இவருடைய நடனங்களை படம் பிடித்தார்கள்.

*நடிகர் திலகம் சிவாஜி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அதற்கு பின் வந்த ஜெய்சங்கர் ரவிச்சந்திரன், அடுத்ததலைமுறையாக கமல் – ரஜினி பின்னர் வந்த தனுஷ் வரை பல தலைமுறை நடிகர்களோடு நடித்து 1000 திரைப்படங்களை தொட்டவர் நாகேஷ்.

*அழகான முகமே திரைப்படத்தின் இலட்சணம் என்று கருதப்பட்ட காலத்தில் குன்றும் குழியுமாக இருந்த தனது முகத்தினால் சரித்திரம்படைக்க முடியுமென நிறுவினார்..!!

நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Facebook Comments