செய்திகள்

2017 சமாதானத்துக்கான நோபல் பரிசு

இந்த வருடத்துக்கான  நோபால பரிசு விபரங்கள்  அறிவிக்கப்பட்டு கொண்டு இருகின்றன.தற்போது சமாதானத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ICAN என்று சொல்லபடுகின்ற International Campaign to Abolish Nuclear Weapons அணுஆயுத பாவனைக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்ற அமைப்பு ஒன்றிற்கு இப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ICAN  அமைப்பு  2007 இல் ஆரம்பிக்கப்பட்டது .இன்று உலகம் முழுவதற்கும்  468 துணை நிறுவனங்கள் 101 நாடுகளில் உள்ளது.

குறிப்பாக இவ்வமைப்பு அமெரிக்கா – வட கொரியா பதற்றத்தை தவிர்ப்பதில்  கடந்த வருடத்தில் இருந்து பல பங்களிப்புகளை வழங்கி வந்தது.

இந்த பரிசுக்கான சிபாரிசு பட்டியலில் சிறீலங்கா அதிபர் மைத்திரி பால சிரிசேனாவின் பெயரும் இருந்தது.பெரும்பாலும் அவருக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டு வந்ததது.இது சிறீலங்கா மட்டத்தில் ஒரு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த கால பரிசுகள்

2016 –  கொலம்பிய ஜனாதிபதி (Juan Manuel Santos)

2015 –  துனீசியாவின் ஜனநாயக சார்பு குழு ,

அரபு நாடுகளின் வசந்தத்திற்காக தமது தாயகத்தில் ஜனநாயகத்தினை நிலைநாட்ட பாடுபட்டதற்காக ‘த நஷனல் டயலொக் குவார்டட்’ எனும் அமைப்புக்கு குறித்த பரிசு கிடைத்தது.

துனீசிய பொதுத்தொழிலாளர் சங்கம், துனீசிய தொழில் கூட்டமைப்பு, வர்த்தகம் மற்றும் கைவினையாளர் சங்கம், துனீய மனித உரிமைகள் சங்கம் மற்றும் துனீசிய சட்டத்தரணிகள் இணைந்து இந்த அமைப்பினை கடந்த 2013 இல் உருவாக்கினர்.

வன்முறை மற்றும் போராட்டங்களால் பாதிக்கப்பட்ட துனீசியாவில் அமைதியை நிலைநாட்ட எடுத்த முயற்சிக்காகவே ‘குவார்டட்’ அமைப்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

2014 – இருவர்

சமாதானத்துக்கான நோபல் பரிசு பாகிஸ்தானின் மலாலா யூசப்ஷாய், இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. பாகிஸ்தானைச் சேர்ந்த 17 வயதேயான சிறுமி மலாலா பெண்களின் கல்வி உரிமைக்காக குரல் கொடுப்பதுடன் – போராடியும் வருகிறார். 14 வயதில் தலிபான்களின் அச்சுறுத்தலையும் மீறி கல்வி கற்கப் பாடாலைக்குச் சென்ற மலாலா அவர்களினால் சுடப்பட்டார். படுகாயமடைந்து பின்னர் அதிலிருந்து மீண்டெழுந்த அவர் கல்வி கற்க பாடசாலைக்கு சென்றார். அத்துடன் பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்பதில் முழுமூச்சாக செயற்பட்டும் வருகிறார். இதற்காகவே அவருக்கு சமாதனத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறுவயதிலேயே சமாதானத்துக்கான நோபல் வென்றவர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். சிறுமி மலாலாவுடன் இணைந்து இந்தப் பரிசை இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தியும் பெற்றுள்ளார். சிறுவர்களின் கல்வி உரமைக்காகப் போராடி வருகிறார் என்பதற்காகவே இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

2013 – வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு

வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு (Organisation for the Prohibition of Chemical Weapons) என்பது நெதர்லாந்தின் டென் ஹாக் நகரில் அமைந்துள்ள பன்னாட்டு அரசுகளுக்கிடையேயான அமைப்பு ஆகும். இவ்வமைப்பு வேதி ஆயுத உடன்படிக்கையினையின் படி வேதியியல் ஆயுதங்களை பயன்ப்படுத்தாதிருப்பதையும், கையிருப்பில் உள்ள ஆயுதங்களை அழிப்பதையும் சரிபார்க்கும் பணியினை செய்கின்றது. இச்சரிபார்க்கும் பணி உறுப்பு அரசுகள் அளிக்கும் அறிக்கைகளின் அடிப்படையிலும், தள ஆய்வுகள் மூலமும் மதிப்பீடு செய்யப்படுகின்றன

2012  – ஐரோப்பிய ஒன்றியம்

 

2009 இல் பராக் ஒபாமாவும் இதை பெற்றார்.

முழுமையான பட்டியலை பார்க்க கிளிக் செய்க

 

நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Facebook Comments