நிகழ்வுகள்

1000 கவிஞர்கள் கவிதைகள் – பெரு நூல் வெளியீடு

ஒரு மிகப்பெரிய கவிதை தொகுப்பு பெருநூல் வெளியீடு நடைபெற உள்ளது.மிகப்பெரிய ஒரு ஒருங்கிணைப்பு முயற்சி நிஜமாகின்றது.சொல்லபோனால் ஓர் ஆயிரம் கவிஞர்களின் பல்லாயிரம் கனவுகள் ஒரு புத்தகமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.புத்தகங்களின் மீதான பிடி சற்றே இளகி இருக்கும் இணைய யுகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பாராட்டத்தக்க முயற்சி,சாதனை என்று தான் சொல்ல வேண்டும்.

முழுமை அடைந்து  இருக்கும்   “1000 கவிஞர்கள் கவிதைகள்”  என்ற இந்தபெரு நூல்

  • 1098 கவிஞர்கள்
  • 1861 பக்கங்கள்
  • 4.45 KG எடை
1000 கவிஞர்கள் கவிதைகள்
1000 கவிஞர்கள் கவிதைகள்

இப் பெருநூலின் வெளியீட்டு விழாவானது , 21.10.2017(சனிக்கிழமை) ஆம் திகதியில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. , யாழ்ப்பாணம்,வீரசிங்கம் மண்டபத்தில்  இலங்கை. நேரம்  காலை 09.30 மணிக்கு நிகழ்வு ஆரம்பிக்கப்படும்.

நிகழ்விற்கு தமிழுலகு அறிந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் தலைமை வகிப்பார். அத்துடன் பத்து பேராசிரியர்கள் நூல் வெளியீட்டிற்கு முன்னிலை வகிக்கவுள்ளனர். நூலின் நோக்குரையினை அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தரும் பன்முகப் படைப்பாளி, முன்னாள் இந்து கலாச்சார விரிவுரையாளர் எம்.ஜெயராமசர்மா நிகழ்த்துவார். இலங்கை, இந்தியா, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா என பல தேசங்களின் படைப்பாளர்களும் நூல் வெளியீட்டில் பங்கேற்கவுள்ளனர். வெளியீட்டிற்கு முன்னதாக பல்வேறு கலாச்சார நிகழ்வுகளை உள்ளடக்கிய கலாச்சார பவனியும் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.

 

 

தனது கவிதையை ஒரு புத்தகமாக வெளிஇடுவது ஓர் ஒப்பற்ற மகிழ்ச்சியை கொடுக்கும்.அதை விட இன்னொரு வெளியீட்டின் புத்தகத்தில் தனது கவிதை இடம்பெறும் போது அதை விட மிக பெரிய மகிழ்ச்சி ஒரு படைப்பாளிக்கு இருக்காது.

ஒன்று ரெண்டு நாடுகள் அல்ல 32 நாடுகளை சேர்ந்த 1098 கவிஞர்களை இந்த நூல் ஒருங்கிணைத்து உள்ளது.இவ்வாற வெளியீட்டுக்கும் புத்தகத்துக்கும் ஆதரவு கொடுப்பது மேலும் இலக்கிய மொழியியல் வளர்ச்சிக்கு அத்தியாவசியம்.

இந்தியா, தமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள் மற்றும் இந்திய பிற மாநிலங்கள், இலங்கையின் அனைத்து பிரதேசங்களின் கவிஞர்களும் இப்பெருநூலில் உள்ளடங்குகின்றனர்.

கண்டிப்பாக இக்கால தமிழ் கவிதை வழக்குகள் ,நடைகள் மற்றும் போக்கு என்பனவற்றுக்கு காலத்துக்கும் ஒரு சான்றாக ,கண்ணாடியாக இந்த நூல் இருக்கும்!

 

1000 கவிஞர்கள் கவிதைகள்
                                                                      பிரசவத்துக்கு தயாராகும் 1000 கவிஞர்கள் கவிதைகள்

 

மேலதிக தொடர்புகளுக்கு

செயலியக்குநர்: யோ.புரட்சி

பதிப்புரிமை: யமுனா நித்தியானந்தன், கனடா.

வெளியீடு:செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம்.

பொதுத்தொடர்பு: (0094) 775892351

tamilkavithaikal1000@gmail.com

 

இந்த நிகழ்வு தொடர்பாக இலங்கையின் பிரதான இரு பத்திரிக்கைகளில் வெளியாகிய கட்டுரையைஇணைத்துள்ளோம்.

.

நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Facebook Comments