இந்தியா செய்திகள் மிக முக்கிய பதிவுகள்

வீரசந்தானம் ஐயா அவர்கள் நேற்று (13 ஜூலை 2017) உயிரிழந்தார்.

வீர சந்தானம் ஐயா அவர்கள் நேற்று (13 ஜூலை 2017) அன்று மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார்.இவருக்கு எமது வீர வணக்கங்கள்.
கடந்த வருடம் கடும் உடல் னால குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டு பின்னரே சில மாத சிகிச்சையின் பின்னர் நலமாகி தனது பணிகளை செய்து வந்த நிலையில் தன 71 ஆவது வயதில் நேற்று திடீர் மூச்சு திணறலால் மரணமடைந்தார்.மிகவும்தமிழனத்துக்கு போராட்டஉணர்வுகளுக்கு இழப்பாகும்.

வீர சந்தானம் ஐயா
முள்ளிவாய்க்கால் முற்றத்தின் மூல ஓவியங்களை வரைந்தவர்

சிறந்த ஓவியர்.கத்தி பீட்சா போன்ற படங்களில் சிறந்த நடிகராகவும் அவதாரம் எடுத்தவர்.கும்பகிய கோணம் ஒவிய கல்லூரியில் படித்தவர்.பின்னர் மும்பை நெசவாளர் பனி மையத்தில் வேலை செய்தார்.பின்னர் தமிழின அக்கறையாலும் போராட்டங்களாலும் ஈர்க்கப்பட்டு சுய விருப்பில் விலகி தன் சமூக வேளைகளில் கடமை என கருதி செயட்பட்டார்.

 

இவரின் ஓவிய திறமை பல உணர்வு போராட்டங்களை தூண்டியது.தஞ்சையில் முள்ளி வாய்க்கால் முற்றம் அமைக்கப்பட்டது.முறையாக பூங்கா அனுமதி பெற்று கட்டப்பட்ட அவ்விடம் பின்னர் அரசால் இடிக்கப்பட்டது.
இங்கு இருந்த சிற்பங்களுக்கு மூலமாய் இருந்த ஓவியங்களை வரைந்தவர் வீரசந்தானம் ஐயா அவர்கள்.

முள்ளிவாய்க்கால் முற்றம்
முள்ளிவாய்க்கால் முற்றம்

ஈழவரலாறு தொடங்கி முள்ளி வாய்க்ககால் அவலம் வரை வீரசந்தானம் ஐயா அவர்கள் வரைந்த ஓவியத்தையே சிற்பிகள் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சிற்பங்களாக மாற்றினார்கள்.

முள்ளிவாய்க்கால் முற்றம்
முள்ளிவாய்க்கால் முற்றம்

இறுதி காலத்தில் டாஸ்மாக்கை மூடும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் இவர் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது .

நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Facebook Comments