நிகழ்வுகள்

முல்லைமண் ஒட்டுசுட்டானில் பிரதேச பண்பாட்டு பெருவிழா – பண்டாரவன்னியன் நினைவு விருது

ஒட்டிசுட்டான் பிரதேச செயலாளர்  தலைமையில் நேற்று(5 அக்டோபர்) நடைபெற்ற இந்த நிகழ்வில் நிகழ்வின் தொடக்கத்தில் மாங்குளம் நகர்பகுதியில் இருந்து மக்களின் பாரம்பரிய கலைபடைப்புக்களை தாங்கிய ஊர்திகள் மற்றும் மாணவர்கள் கலைஞர்களின் கோலாட்டம்,கும்மி,கரகாட்டம்,பறை,காவடியுடன், மாங்குளம் மகாவித்தியாலய மைதானத்தை சென்றடைந்து அங்கு நிகழ்வு இடம்பெற்றது.

யுத்தம்  முதல அத்தனை துயரங்களையும் இந்த மக்களை அனுபவித்து இருந்தாலும் இன்னும் இவர்களின் கலாசார ஈடுபாடும் நேர்த்தியும் மாறாமல் இருப்பது பெருமை கொள்ளபட வேண்டியது.

 

 

 

 

கீழே உள்ளவை 2015 இல் இடம்பெற்ற நிகழ்வு நினைவுகள்

 

தொடர்ந்து அரங்க நிகழ்வில் முல்லையூர் பார்த்தீபன் உடைய பண்பாட்டு பெருவிழா இறுவெட்டினை பிரதேச செயலாளர் வழங்க மாவட்ட அரசாங்க அதிபர் பெற்றுக் கொண்டார்.

பண்டாரவன்னியன் நினைவு விருது

பண்டார வன்னியன்
பண்டார வன்னியன்

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் கலைஞர்கள் மற்றும் சமூக சேவையாளர்களுக்கு பண்டாரவன்னியன் நினைவு விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் பிரதமவிருந்தினராக முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் ரூபவதி கேதீஸ்வரன்,சிறப்பு விருந்தினர்களாக களனிப்பல்கலைக்கழக உளநல ஆலோசகர் பேராசிரியர் எஸ்.ஜே.யோகராசா,யாழ்பால்கலைக்கழக புவியியல் விரிவுரையாளர் செ.ரவீந்திரன், கௌரவவிருந்தினர்களாக, , துணுக்காய் வலயக்கல்விப்பணிப்பாளர் பி.ரவிச்சந்திரன் ,மாந்தைகிழக்கு பிரதேசசெயலாளர்,மற்றும் வெலிஓயா பிரதேச செயலாளர்,ஒட்டுசுட்டான் பொலீஸ்நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.வி.டி.ரத்னாயக்கா,மாங்குளம்பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி வி.பி.ஜே.புஸ்பகுமார ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

அரங்க நிகழ்வாக பிரதேச இளைஞர்களின் கலைநிகழ்வுகள்,கவியரங்கம்,சமூகநாடகம், இசைச்சங்கமம் போன்ற கலை நிகழ்வுகள்என்பன இடம்பெற்றுள்ளது.

நிகழ்வில் சிறப்பு உரையினை மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீவரன் ஆற்றியுள்ளார்.

 

நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Facebook Comments