மிக முக்கிய பதிவுகள்

பூரணையில் ஒரு தியானம் உங்களை வெற்றியாளனாக்கும்

கவனிக்க இது மத ரீதியான பதிவல்ல .அறிவியல் ரீதியான பதிவு.உங்கள் வாழ்கையை மாற்ற போகும் ஒரு சில நிமிடங்கள்.

பொதுவாக எல்லா மதத்தவருக்கும் எதோ ஒரு வகையில் முழு நிலவு முக்கியமானாதகவே அமைகின்றது.

ஆனால் எம்மிடம் ஒரு பழக்கம் உண்டு பூரணை தினத்தினை பார்த்து பயப்படுவது.ஏதும் நடந்து விட கூடாது என பூசை செய்வது,கோவில் செல்வது போன்று எம்மில் எண்ணம் விதைக்கப்பட்டு இருக்குது.பூரணை தினம் சக்தி வாய்ந்தது தான்.இல்லை என்று மறுப்பதற்கு இல்லை.ஆனால் மின்சாரம் பயங்கரமானது தானே அதற்காக அதில் பயன் இல்லை என்று பொருளா?

பொதுவாக ,பிரதானமாக எமக்கு உறுத்துவது மனநிலை குழப்பமானவர்களுக்கு சற்றுகுழப்பம் அதிகமாவது.உண்மைதான் அதற்கான காரணம் இந்த பதிவை தொடந்து வாசிக்கும் போது உங்களுக்கு புரியும்.

ஏன் பூரணை தினத்தில் விசேடமாக ? 

நிலவு எப்போது ஒரே போல தான் இருக்கிறது .ஆனால் பூரணை தினத்தின் போது அதற்கும் பூமிக்கும் தூரம் குறைகின்றது.இதுவே பூரணை தாக்கத்துக்கு காரணம்.அதுவும் நீர் மீதே அதன் ஈர்ப்பு ,ஆதிக்கம் அதிகமாக இருகின்றது.இதனால் தான் பூரணை தினத்தின் போது கடல் கொஞ்சம் அதிகமாக ஆர்ப்பரிகின்றது.எமது உடலில் பெரும் பகுதி நீர் தானே.அதனால் எம்மிலும் சற்று அதிகமாக ஆதிக்கம் செலுத்தி விடுகின்றது.

சரி பூரணை எமக்கும் நல்லது செய்யுமா ? கெட்டது செய்யுமா?

சரியாக சொன்னால் கேட்டது செய்யும் எந்த எண்ணம் உங்களிடம் அன்று இருக்கின்றதோ அந்த எண்ணங்களை அதிகரித்து விடும்.அது தான் உண்மை.

ஒரு அம்ப்ளிபெயர் போல.உங்கள் எண்ணங்களை பெருப்பிக்கும் .

Amplified_

உங்களிடம் பூரணனை ஆதிக்கத்தின் போது நல்ல எண்ணங்கள் இருக்குமாயின் அவை பலமாக அதிகரிக்கும்.

மாறாக நீங்கள் அன்று எரிச்சல் ,கோபமாக இருப்பீர்கள் ஆயின் உங்களிடம் எதிர் மறை விளைவுகளும் ,விரக்தியும் அதிகரிக்கும்.இதுவே மனநிலை சரி இல்லாதவர்கள் பூரனையின் போது சற்று குழப்பமடைவது.

 

இன்னும் ஆபத்தான ,அவதானமாக கையாள வேண்டி இருப்பது என்னவென்றால் மூளையில் உள்ள Pineal gland சுரப்பியை நிலவின் ஆதிக்கம் தன் பூரண கட்டுபாட்டுக்குள் கொண்ர்வந்து விடும்.இதைத்தான் தான் மூன்றாம்  கண் என்று சொல்வார்கள்.

 

 

பூரணை தினத்தில் நீங்கள் என்ன செய்யலாம் ?

பூரணை
பூரணை
 1. நல்ல எண்ணங்கள் அதாவது Positive எண்ணங்களுடன் இருங்கள்.அவை மேலும் மேலும் பெருபிக்கப்படும்.உங்களை ராஜாவாக ,சாதனையாளனாக நினைத்து கொள்ளுங்கள்.
 2. சரியான வழிகாட்டல் பயிற்சியுடன் தியானியுங்கள்.அதுவும் பூரணை இரவில் தியானம் செய்வது  இன்னும் நல்லம் என்று சொல்லப்டுகின்றது.புத்தர் ஞானம் பெற்றது கூட ஒரு பூரணை தினத்தில்.பலருக்கு குண்டலினி சக்தி என்னும் அபரிமிதமான சக்தி கிடைத்தது கூட ஒரு பூரணை தினத்தில் தான்.
 3. கடல் குளியல் (அவதானம் – பூரணை தினகடல் சற்று ஆபத்து ,நீங்கள் கடல் பரிட்சயம் இல்லாதவர் எனின் வழிகாட்டல் அவசியம்).அல்லது உப்பு குளியல்(salt bath) எனப்படும் முறையை கையாளலாம்.ஏன் என்றால் கடல் நிலவின் சக்திகளை உறிஞ்சி இருக்கும்.ரெண்டாவது உங்கள் உடலில் ஊரும் உப்பு நிலவின் சக்தியை கிரகிக்க உதவும்.
 4. கூட்டாக நல்ல காரியங்களை செய்யுங்கள். பௌத்தர்கள் அதிகம் பூரணையில் தானம் செய்வார்கள்.சென் மதம் கூட பூரணைக்கு அதிக முக்கியம் கொடுக்கின்றது
 5. உங்கள் உறவுகளை மேம்படுத்துங்கள்.நீங்கள் யாருடன் உறவுகளை பேன நினைகின்றீர்களோ ?  அவர்களுடன் நேரம் செலவழியுங்கள் பூரணை தினத்தில்.அது உறவை மேலும் பெருப்பிக்கும்.
 6.  ************* முக்கிய விடயம் . நீங்கள் எதுவாக ஆக நினைகின்றீர்களோ அதற்கான திட்டமிடலை மேற்கொள்ளுங்கள்.அதை எழுதுங்கள் ஒரு படமாக வரைந்து கொள்ளுங்கள்.கிறுக்கலாக கூட இருக்கலாம் .ஆனால் ரசித்து கிறுக்குங்கள்.(mind mapping,Plan Visual board) என்று சொல்வார்கள்.
 7. ************மிக மிக ஆபத்தான விடயம் .நம்ப முடியாமல் இருக்கலாம்,ஏற்று கொள்ள முடியாமல் இருக்கலாம்.இதை நிருபிக்கவும் முடியாது.அனுபவ ரீதியாக பலர் செய்து இருகின்றார்கள். அபரிமித சக்திகளுடனான தொடர்பை ஏற்படுத்த சிறந்த நாள்.உதாரணமாக
  • உங்கள் ரோல் மொடல்
  • பிரபஞ்சம்
  • உங்கள் இறந்த தாத்தா,நண்பன்
  • ஏன் விவேகானந்தர்,கிட்லர் என்பவர்களின் ஆன்மாவாக கூட இருக்கலாம் ?

உங்களுக்கு நீங்கள் அதிக சக்தி வாய்ந்த ஒருவராக உருவாக வழிகளை சொல்லியிருகின்றோம்.

அதற்கு சரியான தினம் பூரணை நாள்!

இனி உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்  தான்!

பிறக்கும் போதான உங்கள் நிலைக்கு நீங்கள் பொறுப்பாளி  அல்ல.

ஆனால் இறக்கும் போதான உங்கள் நிலைமைக்கும் பெயருக்கும் நீங்களே முழு பொறுப்பாளி!