செய்திகள்

நாட்டில் உள்ள யானைகளை வெளிநாடுகளுக்கு விற்கும் பரிந்துரை – பலத்த எதிர்ப்பு

அண்மையில் ரத்தினபுரி, பலான்கோட பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் ஊடக பிரதி அமைச்சர் பரணவிதான இலங்கையில் அதிகபட்சமாக 4 ஆயிரம் யானைகள் மட்டுமே இருக்கலாம் என்று கூறினார்.
ஆனால் தற்போது இலங்கையில் 6 ஆயிரம் யானைகள் காணப்படுவது மிக பெரிய அதிகரிப்பு என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளளார்.


இதனால்தான் யானைகளின் மூலம் பொது மக்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் பரணவிதான கூறியுள்ளார்.

எனவே, யானைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் திட்டத்தை நடைமுறை படுத்தலாம் என்று தெரிவித்த அமைச்சர் பரணவிதான இவ்வாறான திட்டங்களுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் எந்த பயனும் ஏற்படபோவதில்லை என்று கூறினார்.

அமைச்சரின் இந்த கருத்துக்களுக்கு பலதரப்பில் இருந்தும் கடுமையான எதிப்பு சொல்லப்பட்டுள்ளது.

யானை உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் தம்சிரி கருணாரத்ன:
இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மனிதர்களின் நடவடிக்கைக காரணமாக நாள்தோறும் பெரும் எண்ணிக்கையான யானைகள் இறந்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
தற்போது பெரஹரா போன்ற பௌத்த வழிபாட்டு நிகழ்வுகளுக்கு பயன்படுத்தக்கூடிய 115 யானைகள் மட்டுமே இருப்பதாக தெரிவித்தார்.
எனவே, யானைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் திட்டத்தை தாங்கள் எதிர்ப்பதாகவும் இலங்கை யானை உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

வன விலங்குகள் பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா :
நமது நாட்டின் யானைகளை விற்பனை செய்யவோ, வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கவோ அனுமதிக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.
சட்ட விரோதமாக காடுகளை அழிப்பது மற்றும் மனிதர்களின் பல மோசமான நடவடிக்கைகளால், யானைகள் இறந்து வருவதாக தெரிவித்த அமைச்சர் ஜெயவிக்கிரம பெரேரா, இந்த நிலையில் யானைகளை விற்பனை செய்ய முடியாதென்றும் அவற்றை பாதுகாக்க தான் சிறப்பு திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Facebook Comments