செய்திகள் நமது பெருமை'

திருகோணமலையில் காணப்படும் பாண்டியர்களின் ரெட்டை மீன் இலட்சனை.

திருகோணமலையில் காணப்படும்
பாண்டியர்களின் ரெட்டை மீன் இலட்சனை..

பொதுவாய் பொலநறுவை கால கட்டுமானங்கள் சோழர்களால் நிறுவப்பட்டவை என்ற கருத்தாடல்கள் உண்டு.இவை இந்திய சோழர் ஆக்கிரமிப்பே இலங்கையில் தமிழ் ஆட்சி என சிலர் நிறுவ வழி கோலுகின்றது.

இந்த இலச்சனை பாண்டியர்களை பற்றியது.

தற்போது இருக்கின்ற மதுரை தான் பாண்டியர்கள் தாயகமா ? இல்லவே இல்லை.

லெமூரியா அல்லது குமரிக்கண்டம் என்ற ஒன்று இருந்து இருக்கின்றது. நிஜமான மதுரை அங்கு தான் இருந்து இருக்கின்றது. அது கடல் கோளால் அல்லது கண்டப்பிளவால் கடலுள் செல்ல எஞ்சியப்பாகம் தான் இலங்கை உட்பட.

திருக்கோணேச்வரம் கடலின் அடியில் இருப்பதாய் கூறப்படும் கோவில், மலையின் சடுதியாக பிளவுண்ட தோற்றம் , திருமலை கடலில் உள்ள ஆழம் அறிய முடியா கடல் பகுதிகள் இக்கண்ட பிளவுக்கு சான்று. தற்போதைய மதுரை பாண்டியர்களால் வேறு ஆளுகையின் கீழ் இருந்து கைப்பற்றப்பட்ட பகுதி .

முதல் இடை கடை சங்கம் என ஆதாரம் இலக்கியம் ஊடாகவும் நீளும்.

ஆக மொத்தம் பல ஆயிரம் ஆண்டுகளின் முன் இருந்த தமிழ் ஆளுகை கண்டத்தின் மீதி ஆகிய இலங்கை பூர்வீகமாக யாருடையது என்பதற்கு வேறு வாதங்கள் தேவையில்லை.

சில இருண்ட காலங்கள் பெரும் பாண்மையை மாற்றி அமைத்தது.

ஒன்று விஜயன் வருகை.(கவனிக்க விஜயனின் எழுச்சி அல்ல வருகை ).

மூத்த சிவனின் தோல்வி – ( பௌத்தம் சமமாய் மதிக்க பட வேண்டும் என இடம்கொடுத்த வீரமா நம்பி கெட்ட முட்டாள் மன்னன் ).

எல்லாளனின் வீரத்தோல்வி – துட்டகைமுனு வெற்றி

மகாசேனனின் ஆதிக்கம் – இவன் கிழக்கு வரை ஆதிக்கம் செலுத்தினான் .எனினும் வன்னிக்குள் இல்லை ) .இவன் காலம் காலம் பல தமிழ் ஆலயங்கள் விகாரைகளாக்கின. இன்னும் பல ஆலயங்கள் பிரமாண்ட விகாரைகளுக்குள் உறங்கி கொண்டுஇருக்கின்றது எனபதும் ஒரு கதை.இதே நேரம் பௌத்த வேறு பாடுகளால் இவனால் பௌத்த ஆலயங்களும் சிதைந்தன.

கஜபாகுகாலம் ( பாண்டியர்களோடு தொடர்பை பேணினான். வட புலத்தில் சில இடங்களின் பௌத்தம் வந்து துளிர்க்கொண்டது . ஆளுகை அதிகாரத்தால் அல்ல இன்று சொல்லப்பட்டும் “நல்லிணக்கம் ” “புரிந்து உணர்வு ” என்னும் சொல்லாடல்களால் . கூடவே கண்ணகி வழிபாட்டையும் கடை பிடித்தான். இவனின் மரணம் கண்ணகி விழாவை வெசாக்ககாக மாற்றியது சோக கதை .

முட்டாள் தனமான தமிழரசியல் தலைவர்கள் சேர் .பொன்.இராமநாதன் – ஆங்கிலேயனிடம் பறித்து அந்நியனிடம் அடகு வைத்த செயல் .

யுத்தத்தை சாட்டி பெரும்தொகை புலம் பெயர்ந்தமை .

நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Facebook Comments