மிக முக்கிய பதிவுகள்

தஞ்சை பெருங்கோவில் பெருமைகளும் ரகசியங்களும்

10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது.

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு.

 • 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயில்.
 • கல்வெட் டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், செப்புத் திருமேனிகள் என பல அம்சங்கள்.
 • கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன.
 • உலகிலேயே மிக பெரிய சிவலிங்கம். 6 அடி உயரம். 54 அடி  சுற்றளவு கொண்ட ஆவுடையார். 23 அரை அடி உயரம் கொண்ட லிங்கம்.
 • மிகப்பெரிய நந்தி உள்ளது.அதுவும் ஒரே கல்லால் செய்யப்பட்டு உள்ளது.14 மீட்டர் உயரம்.7 மீட்டர் நீளம்.3 மீட்டர் அகலம்.இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நந்தியுமாகவும் உள்ளது
 • உலகில் அளவில் பெரிய கல்வெட்டு இங்குள்ள கல்வெட்டு தான்.
 • நவகிரகங்கள் இங்கு  தான் லிங்க வடிவில் தமிழ் நாட்டில் உள்ளது.(ஆந்திரா காளகஸ்தி ஆலயத்திலும் இவ்வாறு உள்ளது)
 • சுமார் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.

 

 

பெரிய கோயில் அளவு கோல்.(இக்கோயில் அல்லது தஞ்சை சார்ந்த ஒரு விசேட அளவு முறை)

(ஒரு முக்கிய விடயம் ,தமிழர்களுக்கும் சிந்து வெளி நாகரிகத்துக்குமான தொடர்பை இது கூட நிரூபிகின்றது.ஆம் இந்த அளவை முறைகளும் சிந்தவெளி நாகரிக அளவு முறையும் ஒத்து போவதாய் ஆய்வாளர்கள் சொல்கின்றனர்)

எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்க மாக அமைத்து அந்த நீளத்தை விரல்,மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழ மே இருவிரல் நீட்டித்து பதி னாறு விரல் அகலத்து, ஆறு விரல் உசரத்து பீடம், ஒரு விர லோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.

தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத் தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அள வாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப் படையில் விமான த்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதா வது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள்.

இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்ப தே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவ றையின் இரு தளங்களிலும் விமா னத்தின் பதின்மூன்று மாடி களும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிட த்தக்கது. அலகு களின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சது ரம். கருவறையின் உட்சுவரும், வெளி ச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமான த்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகு கள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடி கிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.

இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 80 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது.  கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண் டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

அதாவது அக்காலத்தில் ஒரு ஒரு உயர்ந்த இயற்கை அழிவுகள் அதிர்சிகள்  போன்றவற்றை தாங்க கூடிய வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.அன்று அவரிகளிடம் இருந்த அறிவு,அனுபவம், செயற்படுத்துமம் இயலுமை என்பவற்றுக்கு இன்றும் சான்றாக நிமிர்ந்து நிற்கும் அடையாளம் என்று சொல்லலாம்.

 

 

பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு

180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்ட ப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறு கள் மட்டுமே பரிசீலிக்கலாம். கரு வறையின் உட்சுவருக்கும், வெளி ச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப் பாதை உள்ள து. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணை க்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத் ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட் டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண் பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன் றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகா ரத்திலிருந்து விமா னத்தின் 13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதி களாகப் பிரித்துள்ளனர். அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலி ருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடி யிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள்.

கட்டப்பட்ட முறைமை

விமானம் கட்டக்கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும், புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும், மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன.உச்சிக்கவசம்வரை வண்டிப்பாதை நீண்டது.அதாவது, கலசம் பொருத்தும்போது, விமானம் வெறும் களிமண் குன்றாய்இருந்திருக்கும். பிறகு மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக் கணக்கான வர் கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய் குவித்திருக்கின்றனர். சாரம் போட, அதாவது மண்பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம்.(சாரப்பாலம் அல்ல சாரப்பள்ளம்).

விமானம் கட்டப்பட்ட முறைமை
விமானம் கட்டப்பட்ட முறைமை

 

விமானத்தின் உச்சியில் காணப்படும் கல் ஒரே கல்லால் ஆனது என்பது தவறு!

 

 

இக்கல்லுக்கான பெயருக்கும் கதைக்கும் சம்பந்தமிருக்கலாம் ஆனால்  விமானத்தின் உச்சியில் காணப்படும் கல் ஒரே கல்லால் ஆனது என்பது தவறு என 20 வருடங்களுக்கு பெரியகோயில் கும்பாபிசேகத்தில் முன்னின்று உழைத்த பலா் உறுதிப்படுத்துகின்றனர், 6 துண்டுகளான ஆறேன்சு (orange )பழம்போன்று கற்கள் செதுக்கப்பட்டு ஒன்றாக ஒட்டப்பட்டுள்ளது,கற்களை சுளைகள் போல இணைத்து கட்டியமைப்பது என்பது லேசுப்பட்ட காரியமல்ல.மிக சாதனை .ஒரே கல்லை தூக்கி வைப்பதை விட அவ்வாறு அமைத்து ஒரே கல் போன்று தோன்றும் வகையில் அமைப்பது திறமை.

ஆனால் இன்னொரு வாதமும் சொல்லபடுகின்றது

சாரங்களின் அமைப்பு

கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் – ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள்  உபயோகப் படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் – சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்ட ப்பட்ட உறுதி யான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப் பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற் பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.

இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச்சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட் டது. இது அமைப்பில் சீனா வின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சார த்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட் ட சாய்வுப் பாதையின் இறுதி கட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டி ருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இது மட்டு மன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவை ப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.

இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம்  அமைக்கப்பட்டது. சவுக்குக்கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப் பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள், நேர்ச்சட்டங்கள் , குறுக்குச் சட்டங்கள்  அனைத்தும் முட்டுப் பொருத் துகள்  மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத் தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள உதவின.

அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இம்முறையில் எளிதாகவிருந்தது.

எனினும் இவ்வாறான சராமுறையை முறையான ஆய்வாளர்கள் மறுதலிகின்றனர்.காரணம்

 1. இவ்வளவு நீளமான சராங்கள் அமைப்பது பொருத்தமற்றது.
 2. ரெண்டாவது இலகுவாக மண் மேட்டுபாதையை அமைத்து கட்டும் போது அடிமட்டம் கண்ணுக்கு கண்டிப்பாக தெரியாது .இந்த நிலையில் கட்ட வேண்டுமாயின் கட்ட தொடங்கும் முன்னே நுண்ணிய கணித்தல் முறைமைகளில் அளவு பிராமணங்களை கொண்டு திட்டமிட்டு இருக்க வேண்டும்.அததகைய தகமை தமிழரிடம் இருந்தது என்பது சகிக்கமுடியாத வெளிப்பாடே பலகை சாரங்கள் அமைத்து கட்டியது என்னும் நம்பிக்கையில் நம்மை அழுத்துகின்றார்கள்.

மிகப்பெரிய நந்தி

இந்த மிக பெரிய கல் நந்தி சிவலிங்கத்துக்கும் எதிரே உள்ளது.ரெண்டுக்கும் இடையான தூரம் 247 அடிகள்.தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை.இது தமிழ் பற்றுக்கு சான்றாகவும் சொல்லபடுகின்றது.

 

கல்வெட்டுக்கள்

இக் கோயிலின் பலவிடங்களிலும் இருக்கும் கல்வெட்டுக்கள், இக் கோயிலில் இராஜராஜன் கொண்டிருந்த தனிப்பட்ட கரிசனத்தை விளக்குவதாகக் கூறப்படுகிறது. தான் மட்டுமன்றி, அரச குடும்பத்தினரும், அரச அலுவலரும், படையினரும், பொதுமக்களும் ஆகிய எல்லோருடைய பங்களிப்பும், கோயிலின் பராமரிப்பிலும், பாதுகாப்பிலும் இருக்கும்படி பார்த்துக்கொண்டானெனவும் தெரிகிறது. நிதித்தேவைகளும், அரசனால் இறையிலியாகக் கொடுக்கப்பட்ட நிலங்களிலும், கிராமங்களிலிருந்தும் வரும் வருவாயினாலும், இன்னும் வேறு வழிகளிலும் பெற்றுக்கொள்ளப்பட்டது.

கோவிலின் முதல் கல்வெட்டே இதற்கு சான்று.

“நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்த கல்லிலே வெட்டி அருள்க….

தன்னுடைய பங்களிப்பு மட்டுமன்றி மற்ற எல்லோரின் பங்களிப்பையும் ஆவணப் படுத்தியதே வியத்தகு ஒன்று. இங்கே மன்னர் தனக்கு அடுத்தபடியாக முக்கியத்துவத்தை அக்கன்  தன் மூத்த சகோதரியான குந்தவை தேவிக்கு அளிக்கிறார். தன்னை வளர்த்து, கனவுகளை கொடுத்தவருக்கு அவர் செய்யும் சிறப்பாகும் இது. அடுத்து பெண்கள் என்னும் சொல்லின் மூலம் அவரது பட்டத்தரசியான தந்தி சக்தி விடங்கி மற்றும் மனைவியர் கொடுத்த கொடைகளும், கொடுப்பார் கொடுத்தனவும் என்பதின் மூலம் மற்றவர் எல்லோரும் கொடுத்த கொடைகளும் பட்டியலிடப்படுகின்றன.

கோயிலில் அன்றாட கருமங்களை ஒழுங்காகச் செயல்படுத்துவதற்குப், பூசகர்களும், சிற்பிகளும் தேவாரஓதுவார்களும், இசைவாணர்களும், நடனமாதர்களும், மேலும் இன்னோரன்ன பணியாட்களும் தேவைகளுக்கேற்ப நியமிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. 50 ஓதுவார்களும், 400 நடன மாதர்களும் கோயிலிலிருந்ததாகக் கல்வெட்டுச் சான்றுகள் பகர்கின்றன.

ஆயிரம் ரூபாய் நோட்டு(தஞ்சைக் கோயிலின் தோற்றம் பதிக்கப்பட்ட ரூபாய் தாள்)

தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பாக கடந்த 1954ம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி Indian Rupee symbol.svg 1000 நோட்டை வெளியிட்டது. அதில் தஞ்சை பெரிய கோவில் எனப்படும் பிரகதீசுவரர் ஆலயத்தின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் 4வது கவர்னரான சர் பெனகல் ராமாராவ், அதில் கையெழுத்திட்டார்.டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் கான்பூர் ஆகிய நகரங்களில் அந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. 5 வரிசைகளிலான எண்களில் அந்த நோட்டுகள் வெளியாகின. மும்பையில் அச்சிடப்பட்ட நோட்டுகளின் வரிசை ஆங்கில எழுத்து ஏ ஆகும்.

 

5 ரூபாய் நாணயம்

1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

 

ஒரு சில நம்பிக்கைகளும் பிறழ்வுகளும்

 • தஞ்சை பெரிய கோயிலின் கோபுர நிழனானது தரையில் விழாது என்றொரு நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது. ஆனால் இக்கோயிலின் விமான நிழல் தரையில் விழுகின்ற படியே அமைக்கப்பட்டிருக்கிறது. 
 • இக்கோயிலின் மூல கோபுர வழியே நுழைந்தால் அரசியல் தலைவர்களுக்கு ஆகாது என்றொரு நம்பிக்கையும் நிலவுகிறது. இந்திரா காந்தி மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரின் பின்னடைவுக்கு இக்கோபுர வழி நுழைந்ததே காரணமென்று கூறுகின்றனர். ஆயிரமாண்டு நிறைவு விழாவில் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி மூல கோபுர வழிக்கு அருகில் இருந்த மற்றொரு வழியில் சென்றார்.
 • இங்குள்ள நந்தி வளர்கின்றது என்பது  நம்பிக்கை.ஆனால் அதுவும் உண்மை இல்லை.
தஞ்சை பெருங்கோவில் நிழல்
தஞ்சை பெருங்கோவில் நிழல்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நம்பிக்கை இருக்கலாம்.ஆனால் அவை பிழை என நிருபிகின்ற வகையில் இருக்குமாயின் அது இக்கோவில் பற்றிய மீதி உண்மை தகவல்களும் பொய் என்னும் மனநிலையை உருவாக்கி விடும்.அவதானம் தேவை.

the Hindu பத்திர்க்கையின் இணையத்தளத்தில் வெளியான பதிவு இணைப்பு ஒன்றை இந்துள்ளோம்.

http://www.thehindu.com/lf/2004/03/30/stories/2004033001340200.htm

 

இந்தக் கோயிலில் ரகசியப் பாதையில் இருக்கும் சுவர்களில் மட்டுமே ராஜ ராஜ சோழனின் படம் உள்ளது.

இந்தக் கோயிலில் இருக்கும் சுரங்க பாதைகளுக்கான சரியான வழி ராஜ ராஜ சோழன் மட்டுமே அறிந்தருந்ததாகவும் அங்கு புதையல்கள், சுவடிகள், பத்திரக் கிடங்குள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரு சுரங்கப்பாதையை கடந்து சென்றால் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வரும் வழி இதுவரை யாரும் அறிந்திருக்கவில்லை.

 

இந்தக் கோயிலில் அடித்தளம் அமைக்கும் போது கிணறு போன்று பெரிய பள்ளம் உருவாக்கப்பட்டது. அந்தப் பள்ளத்தில் மிகவும் சிறிய அளவிலான ஆற்று மணல் டன் கணக்கில் கொட்டப்பட்டு நிரப்பட்டன. அதன் மேல் தான் அடித்தளம் அமைக்கப்பட்டது. இந்த மணலானது நிலநடுக்கம் சமயத்தில் நில அதிர்வுகளுக்கு ஏற்றார் போல் மேலும் கீழும் நகர்ந்து போகும் தன்மை உடையவை. இது இந்த பெருவுடையார் கோவில் நிலநடுக்கத்தால் பாதிப்புறாமல் இருக்கும் வண்ணம் அமைக்கப்படுள்ளது. ஆனால் இந்த நடைமுறையை கடந்த நூற்றாண்டில்தான் இன்றைய விஞ்ஞானம் அமல்படுத்தத் தொடங்கியது.

அன்மையில்(2010) கருவறைக்கு அண்மையில் ஆழ்துளை கிணறு ஒன்று கிணறு தோண்ட முயற்சிக்கப்பட்டது.ஆனால் விபரீதமாய் மூன்று லொறி மணல் வெளியே வர சிலரின் எதிர்ப்பால் ஆழ்துளைகிணறு முயற்சி கைவிடப்பட்டது.இங்கே தோண்டும் பொது பாறைகளோ,குறுமணலோ வரவில்லை.அடி ஆழத்தின் பின்னர் தான் களி மணல் வெளியானது.அதுவரை கிடைத்த மண் இப்பகுதியை சேர்ந்ததல்ல.

Zero Settlement of Foundation 

கோயிலின் அசதி வாரம் ஆற்று பரு மணல் படுக்கைகள் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.கோவிலை விட அத்திவாரம் ரெண்டு மடங்கு நிறை உடையதாக இருக்க வேண்டும்.இங்கு கிடங்கு வெட்டி அங்கு இருந்தா பாறைகளை அகற்றி கற் தொட்டியினைமைத்து அதில் பரு மணலை நிரப்பி அழுத்தி செய்து இருகின்றார்கள்.பூமி தட்டு நகர்வின் போது மணல் தன்னை தானே தொட்டியில் சமப்படுத்தி கட்டிடத்தின் நிலையை பாதுகாக்கும்

 

 

தொழில்நுட்பமே இல்லாத சமயத்தில் இந்த கிராணிட் கற்கள் எவ்வாறு உடைக்கப்பட்டன என்பது ஆச்சரியமான ஒன்று. இந்த கிரணிட் கற்களில் வரிசையாக துளையிடப்பட்டு, அதில் கட்டைகள் சொறுகப்படுகின்றன. பின் இந்த துளையில் நீர் ஊற்றப்படுகின்றன. இந்த கட்டைகள் நீரில் நனைந்து விரிய இந்த கிராணிட் கற்கள் உடைகின்றன.15 மைல் தூரத்திலிருந்து கிரானிட் கற்கள் ஆற்றில் இருக்கும் பரிசல்கள் மூலம் கொண்டுவரப்பட்டன என கூறப்படுகிறது.

 

எல்லாத்துக்கும் மேலாக இந்தக் கட்டுமானப் பணிகள் நடக்கும் காலத்தில், தற்காலிக மருத்துவமனைகள், வீடுகள், வேலை செய்பவர்களுக்கு உணவு தயாரித்தல், வேலையாட்களுக்கு வீடுகள், பொழுது போக்கு அங்கங்கள், வீர விளையாட்டுகள் என ஒரு நகரமாகவே திகழ்ந்திருக்கின்றது இந்த இடம்.

108 சிற்பங்கள் நடன சிற்பங்கள்

 

பெரியகோயிலின் கோபுரத்தில் முதல் மாடியில் நாலாபுறமும் நாட்டிய சாஸ்திரத்தில் பரதமுனி குறிப்பிட்ட பரதநாட்டிய முத்திரைகளை சிவபெருமான்  ஆடிக் காண்பிப்பது போன்ற சிற்பங்கள் ராஜராஜசோழன் காலத்தில் செதுக்கப் பட்டன. மொத்தம் 108 சிற்பங்கள். அவற்றில் 81 சிற்பங்களை மட்டுமே சிற்பிகள் முடித்து, மிச்சத்தை அப்படியே விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். ஏன்? காரனம் தெரியவில்லை.

மழைநீர்சேகரிப்புத் திட்டத்துக்கும் ராஜராஜ சோழனுக்கும் சம்பந்தம் உண்டு என்றால் ஆச்சரியப் படுவீர்கள். மழைநீர் சேகரிப்பை முதன் முதலில் செயல்படுத்திய மன்னர் ராஜராஜசோழன்தான்! பெரியகோயிலில் விழும் மழைநீரை துளியும் வீணாக்காமல் அப்படியே கோயிலுக்கு அருகிலுள்ள சிவகங்கை குளத்துக்குக் கொண்டு செல்லவேண்டும் என்று திட்டம் போட்டார். அதற்காகத் தரைக்கடியில் பெரிய குழாய்கள் போடப் பட்டன (இன்றும் அவற்றை நாம் காணலாம்). தவிர, தஞ்சாவூரிலுள்ள சேவப் பன்னவாரி என்னும் ஏரி மழைக்காலத்தில் நிரம்பிய பிறகு, அந்த நீர் வீணாகாமல் குழாய்கள் மூலம் சிவகங்கை குளத்துக்கு வாய்க்கால் மூலம் கொண்டுசெல்லப் பட்டு, வடிகட்டப்பட்ட பிறகு, அங்கிருந்து எல்லாத் தெருக்களுக்கும் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

 

தஞ்சைப் பெரியகோயில் கட்டிட கலைஞர்கள்

1. இராசராசசோழன்
2. வீரசோழன் குஞ்சரமல்லன் ( ராசராசப் பெருந்தச்சன் என்ற கட்டிட கலைஞன் )
3. மதுராந்தகன் நித்தவினோதப் பெருந்தச்சன் ( இரண்டாம் நிலை கட்டிட கலைஞன் )
4. இராசராசசோழனின் தமக்கை குந்தவை பிராட்டியார்
5. இலத்தி சடையனான் ( கண்டராதித்த பெருந்தச்சன் – இரண்டாம் நிலை கட்டிட கலைஞன் )
6. ஈசான சிவபண்டிதர் எனும் ராசகுரு
7. இராசராசசோழனின் மகன் இராசேந்திரசோழன்
8. இராசராசசோழனின் ராசகுரு சர்வசிவபண்டிதர்
9. சேனாதிபதி கிருட்டிணன் இராமன் ( மும்முடிச்சோழன் பிரமமாராயன் )
10.தென்னவன் மூவேந்த வேளன் எனும் பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனார் ( கோயில் நிர்வாக
அதிகாரி)
11. பவனபிடாரன் ( சைவ ஆச்சாரியார் தலைமைக் குரு )

 


உலகின் முதல் பொற்கோபுரம்

தட்சிணமேரு என்னும் தஞ்சை பெரிய கோயில் விமானம் முழுவதும் செப்புத்தகடுகளைப் போர்த்தி அதன்மேல் பொன் வேய்ந்தான் ராஜராஜன் என்று கல்வெட்டுச்செய்திகள் தெரிவிக்கின்றன.  216 அடி விமானம் முழுவதும் தங்கத்தகடு வேய்ந்ததைஒட்டக்கூத்தர்  தக்கயாகப்பரணியில் குறிப்பிட்டுள்ளார். தட்சிணமேருவான தஞ்சை ராஜராஜேஸ்வரத்தை எப்படி ராஜராஜன் பொன்மயமாக அமைத்தானோ, அதுபோல, தில்லை நடராஜர் கோயில் விமானத்தை குலோத்துங்கன் அமைத்தான் என்ற செய்தி சிதம்பரம் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.  பிற்காலத்தில் நிகழ்ந்த படையெடுப்புகளில் இந்த விமானத்தில் வேய்ந்த பொன் முழுவதும் சூறையாடப்பட்டு விட்டது.

 

 

பிரமாண்ட சிற்பங்கள்

உயரத்தை மனிதனின் உயரத்தோடு அல்ல யானையின் உயரத்தோடு ஒப்பிட்டு பாருங்கள்

நீங்கள் பார்ப்பது துவாரபாலகர் சிலை.இதை நுணுக்கமாக கவனித்தால் காலில் ஒரு கதை என்னும் ஆயுதமும் அதன் அடியே சிக்குண்ட பாம்பும் அந்த பாம்பு ஒரு யானையை விழுங்குவது போலவும் குறிக்கப்பட்டுள்ளது.

யானையை விழுங்கும் பாம்பு எவ்வளவவு பெரிதாக இருக்கணும்.அதை நசுக்கும் கதை எவ்வளவு பெரிது.அப்படி என்றால் துவாரபல்கள் எத்தகைய உயரம்.இந்த உயரமான துவார்ரபாலகர் காக்கும் கோவில் என்ன பிரமாண்டம்.

கோவிலின் பிரமாண்டத்தை சிற்பத்தில் சொல்ல விளைந்த விதம் அற்புதம்.உண்மையில் இது எத்தகைய ஓரி கலை உயர்ச்சி.

 

இராஜராஜ சோழன் பெரிய கோவிலை கட்டி முடித்ததும், “சிவபாத சேகரன்” என்ற பட்டத்தையும் பெற்றான். ஆகவே, சிவபாத சேகரன் அதாவது இராஜராஜன் இறுதி காலத்தில் அமரரான இடம் என்பதை குறிக்கும் வகையில் இந்த ஊருக்கு “சிவபாத சேகர மங்கலம்” என்ற பெயர் இருந்திருக்கிறது.

 

நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Facebook Comments