You are here
தலைவாசல் > Uncategorized > சே குவேரா – புரட்சியின் அடையாளம்

சே குவேரா – புரட்சியின் அடையாளம்

கடந்த நூற்றாண்டின் ஒரு உன்னதமான போராளி! மெல்ல மெல்ல பரவி கொண்டு இருந்த சே என்னும் தீ இன்று (1967 அக்டோபர் 8) பொலிவியாவில் வைத்து கைது செய்யப்பட்டார்.அக்டோபர் 9 அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் !

கைது செய்ததது பொலிவியா ராணுவம்.கொல்ல சொன்னது சி.ஐ.ஏ.

இவரின் மரணத்தின் போதான சில சம்பவங்கள் வரலாற்றில் பதியப்பட்டு இன்று வரை மறக்காமல் சொல்லப்படும் விடயாமாகி விட்டது.

தன்னை சுட வரும் போது தன்னை நிற்க  வைத்து சுடுமாறு கேட்கிறார்.ஆனால் அதை பொருட்படுத்தாமல் கால்கள் கட்டப்பட்டு முட்டி போட வைக்கப்பட்டு சுடப்படுகின்றார்.

அப்போது அவர் சீறிய வார்த்தை இது தான்.

‘‘கோழையே, சுடு! நீ சுடுவது ‘சே’வை அல்ல ஒரு சாதாரண மனிதனைத்தான்!’’

 

 

 

 

 

 

 

 

 

 

 

சே சுடப்பட முன்னர்  தனக்கு உணவு வழங்க வந்த பள்ளி ஆசிரியையிடம், ‘‘இது என்ன இடம்?’’ என்று ‘சே’ கேட்கிறார். பள்ளிக்கூடம் என அந்தப் பெண் கூற, ‘‘பள்ளிக்கூடமா… ஏன் இத்தனை அழுக்காக இருக்கிறது?’’ என வருத்தப்படுகிறார். சாவின் விளிம்பிலும் ‘சே’வின் இதயத்தை எண்ணி அப்பெண் வியந்து போகிறார்.

இது தான் சே சிறை வைக்கப்பட்டு இருந்த பாடசாலை.இது பொலிவியாவின் la higuera என்ற இடத்தில் அமைந்துள்ளது.

சே சிறை வைக்கப்பட்ட பாடசாலை
சே சிறை வைக்கப்பட்ட பாடசாலை

இங்கே ஒரு முக்கிய விடயம் என்ன வென்றால் இவ்விடத்தில் பொலிவிய மக்கள் சே க்கு சிலை வைப்பதும் அரச தரப்பு அதை உடைப்பதுமாக மாறி மாறி நடந்து வருகின்றது.

சே இன் தோல்வியையும் இறப்பையும் பற்றி பார்த்தோம்.

 

யார் இந்த சே ?  ஏன் இன்றளவும்  புரட்சியின் அடையாளமாகவும் இருகின்றார்   என்று பார்ப்போம்!

முதலில் செயின் உண்மை பெயர்  :  ஏர்னெஸ்டோ குவேரா டி ல செர்னா

ஏர்னெஸ்டோ குவேரா – தந்தையின் பெயர்

டி ல செர்னா  – தாயின் பெயர்

ஏன் இந்த பெயர் மாறி சே என்றானது ?

சே என்றால் அர்ஜெண்டீன மொழியில் “நண்பன்” அல்லது “தோழர்”  என்று பொருள்.இன்றளவுக்கும் புரட்சிக்கும் போராளிகளுக்கும் அவர் தோழர்தான்.

 

அர்ஜென்டீனாவை பிறப்பாக கொண்ட இவர் சிறுவயதில் ஆஸ்துமாவால் பீடிக்கப்பட்டவர்.தந்தையின் பயிற்சிகளால் பின்னர் ஓரளவு குணமாகி ஏகாதிபத்தியத்தை எதிர்த்தார்.

இவர் மருத்துவ பட்ட படிப்பில் இணைந்து கொண்டார்.பின்னர் ஒரு வருடம் படிப்பை நிறுத்தி விட்டு தன் நண்பருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் தென்னமெரிக்க தேச பயனங்களை மேற்கொண்டார் அதுவும் மோட்டார் சைக்கிளில்.இந்த நண்பர் பின்னர் எழுதிய

“மோட்டார் சைக்கிள் டயரி”  என்னும் நூல் உலக பிரசித்தமானது.

பின்னர் மீண்டும் பல்கலை கழகத்தில் இணைந்து 1953 இல மருத்துவர் பட்டம் பெற்றார்.பின்னர் மிக நீண்ட தென்னமெரிக்க நாடுகளின் பயணத்தை மேற்கொண்டார்.இந்த பயணம் இஸ்பானிய.அமெரிக்க ஏகாதிபத்திய கொடுமைகளை சே க்கு சுட்டிக்காட்டியது.

 

 

பின்னர் மெக்சிக்கோவில் பிடல் கஸ்ரோவுடான சந்திப்புடன் பிடலுடன் இணைந்து சே கியூபாவுக்காக போராடினார்.பல போராட்டங்களின்

பின்னர் கியூபா சுதந்திர தேசமாகின்றது.

 

1959, பிப்ரவரி 16ல் கியூபாவின் பிரதமராக காஸ்ட்ரோ பதவியேற்றவுடன் குவேராவை ஒரு கியூபன் என்று அறிவித்தபிறகு அந்த வருடம் அக்டோபர் மாதம்  தேசிய வங்கியின் அதிபராகவும் ஃபிடல் காஸ்ட்ரோவால் நியமிக்கப்பட்டார். விவசாயத் துறையில் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார் ‘சே’. தேசிய வங்கியின் தலைவராக கியூபா ரூபாய் நோட்டுகளில் ‘சே’ என கையெ ழுத்திடும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றார். பின் 1961ம் ஆண்டு தேசிய வங்கியின் பதவியைத் துறந்து தொழிற்துறை அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். இருந்தாலும் ‘சே’ தன்னை ஒரு சாதாரணக் குடிமகனாகவே அடையாளம் காட்டிக் கொண்டார். விவசாயக் கூலிகளுடன் சேர்ந்து கரும்பு வெட்டுவதும், தொழிற் சாலைகளில் இதர பணியாளர்களுடன் சேர்ந்து மூட்டை சுமப்பதுமாகவே வாழ்ந்தார். ‘சே’ மற்றும் காஸ்ட்ரோ இருவருக்குமிடையே யுத்தத்துக்கு முன்பும் பின்புமான உறவுகளில் வேறுபாடுகள் இருந்தது என்றாலும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்ததில்லை.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை மூன்றாம் உலக நாடுகளின் பிரதிநிதி யாக, ஒற்றை மனிதனாகத் தன்னால் வேரறுக்க முடியும் என ‘சே’ திடமாக நம்பினார்.. கியூபாவுக்கு ஏவுகணைகள் இறக்குமதி செய்ய ரஷ்யா வாக்குறுதி தந்தபோது, ‘‘ரஷ்ய ஏவுகணைகள்

கியூபாவில் இறங்கினால் அது முதலில் அமெரிக்க நகரங்களையே குறிவைக்கும்’’ எனத் தைரியமாகக் குரல் கொடுத்தார். அமெரிக்கா, கியூபாவின் மீது விதித்த பொருளாதாரத் தடைதான் அவரது இந்தக் கட்டற்ற கோபத்துக்குக் காரணம். அமெரிக்காவின் சி.பி.என். தொலைக்காட்சி, ஒரு நேர்காணலுக்காக சேகுவேராவை நியூயார்க்குக்கு அழைத்தது. ‘‘அமெரிக்கா ஒரு கழுதைப் புலி. அதன் ஏகாதிபத்தியத்தை நான் வேரறுப் பேன்’’ என அமெரிக்க மண்ணிலேயே துணிச்சலாகப் பேட்டி தந்தார் ‘சே’. சென்ற இடங்களிலெல்லாம் அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

 

பின்னர் சே கியூபாவை விட்டு வெளியாகின்றார்.அடுத்த போராட்த்துக்கு தன்னை ஈடுபடுத்துகின்றார்.அது பொலிவிய மக்களுக்காக அமெரிக்க கூலி பொலிவிய அரசுக்கு எதிராக!

சே கியூபாவை விட்டு வெளியேறும் பொது எழுதி வைத்த கடிதத்தில்

“என்னை கியூபாவின் புரட்சியுடன் தொடர்புபடுத்திய கடமை முடிந்துவிட்டது. அந்தக் கடமையை நான் செவ்வனே முடித்து விட்டேன். உங்களிடமும், மற்ற போராளிகளிடமும், என்னுடைய மக்கள் ஆகிவிட்ட கீயூபன் மக்களிடமும் நான் விடை பெறுகிறேன் “

என்று எழுதியிருந்தார்.

கியூபாவை விட்டு சே வெளியேறக் காரணம்

  • தென்னமெரிக்க நாடுகளை விடுவிப்பதே /புரட்சியை விதைப்பதே அவர் நோக்கம்.தனியே கியூபாவின் விடுதலை மட்டுமல்ல
  • காஸ்ட் ரோவின் தம்பி ரால் காஸ்ட்ரோ (Raul castro) ‘சே’வை  சுடு சொல்லால் அழைத்ததாகவும், அது ‘சே’வின் மனதை மிகவும் காயப் படுத்தியதாகவும், அதுதான் ‘சே’ கியூபாவை விட்டு வெளியே செல்லக் காரணம் என்றும் சொல்லப் படுவதுண்டு.
  • 1964ம் ஆண்டு ஜூலை மாதம் இரு அமைச்சர்களின் நியமன சம்பவம் பொருளாதாரக் கொள்கைகளில் அமைச்சர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிய ஒரு வாய்ப்பாகியது.
  • குவேராவின் எண்ணமும் விருப்பமுமான மற்ற இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் ஆப்பிரிக்காவிலும் புரட்சி வெடிக்கச் செய்யும் திட்டம். மற்ற தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்நாட்டுப் பிரச்னைகளைத் தீர்ப்பது அதைவிட முக்கியம் என்று போர்க்கொடி தூக்கினார்கள்.
  • 1964ம் ஆண்டு டிசம்பர் மாதம் குவேரா அமெரிக்கா, ஆப்பிரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு மூன்று மாத அதிகாரப்பூர்வமான சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பியபோது, தனது அதிகாரப்பிடி தளர்ந்து போனதை குவேரா அறிந்து கொண்டார்.கியூபாவில் இருந்து மற்ற நாடுகளின் புரட்சிக்கு ஒன்றும் செய்ய முடியாது என்று உணர்ந்து கொண்டார்.

கியூபாவை விட்டு விலகி மற்ற நாடுகளில் புரட்சி ஓங்குவதற்கு உதவி புரியும் பொருட்டு அங்கிருந்து கிளம்பினார் . பொலிவியாவுக்கு சென்று போராடினார்.கியூபாவை புரிந்து வைத்த அளவு போலிவியாவின் இயற்க்கை நிலைகளையும் கலாசாரத்ததையும் புரிந்து கொள்ளாதமையே சே தோல்விக்கு காரணம் என் சொல்லப்டுகின்றது.

 

சே இராணுவத்திடம் பிடிப்பட்டது கூட சே உதவி செய்து விட்டு வந்த ஒரு பெண்ணால் தான் என்று சொல்லபடுகின்றது.

 

தன் சொந்த நாடு அல்லாத ஒரு தேசத்துக்காக போரிட்டு வென்று பதவிகளை ,குடியுரிமையை துறந்து மீண்டும் தன் சொந்த நாடு அல்லாத ஒரு தேசத்து மக்களுக்காக போராட துணிவது என்பது அசாத்தியமான  ஒரு செயல் வீரனால் தான் இயலும்.

 

“500” “6௦௦” என்ற கட்டளை சே என்ற மனிதரினை அணைகின்றது.

500 என்றால் சே!

600 என்றால் கொல்!

அது தான் சே இன்றளவும் மறக்க படமால் இருப்பதற்கு காரணம்.

 

Top