நமது பெருமை'

உகந்தை முருகன் கோவில் அம்பாறை

உகந்தை அம்பாறை மாவட்டத்தில் கடற்கரை மற்றும் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம். இப்பகுதி உகந்தை மலை வேலாயுத சுவாமி கோயில் மகதிர்காமம் செல்லும் யாத்திரிகர்கள் வழியில் இங்குள்ள தங்கிச் செல்லும் முக்கியமான கோவிலாகும்.

கொத்துப்பந்தரின் கீழ் முத்துக்குமரன் வீற்றிருந்த இத்தலத்தில், யாழ்ப்பாணத்து மார்க்கண்டு என்னும் வணிகர் 1885ஆம் ஆண்டு புதிய கோயில் ஒன்றை நிர்மாணித்ததாகவும் வரலாறு கூறுகின்றது.

அந்நேரம் இத்திருத்தலத்தின் வண்ணக்கராக சேகர ஸ்ரீ வர்ணதிசாநாயக்கா என்றும் முதியன்சே பண்டார மகாத்மியா என்றும் அழைக்கப்பட்ட ஒருவரை நியமித்தார்கள். இவர் தமிழ் மொழியை நன்கு அறிந்த பாணமையைச் சேர்ந்தவராவார். இவர்தான் இக்கோயிலின் முதலாவது வண்ணக்கர் என்ற இடத்தை வகித்தார். பின்னர் இவருடைய பரம்பரையினரே இன்றுவரை வண்ணக்கராகக் கடமை புரிகின்றனர் என்றும் கூறலாம்.

 

உகந்தை திருமுருகன் ஆலயத்தின் விருட்சம் வெள்ளை நாவல் மரமாகும்.

ஆலயம் அருகேயுள்ள இருகுன்றுகளில் வள்ளியம்மனும், வேற்சாமியும் கோயில் கொண்டுள்ளனர். இவ்விரு குன்றங்களிலும் அமைந்துள்ள ஏழு நீர்ச்சுனைகளில் மூழ்கி நீராடினால் புண்ணியம் என நம்பப்படுகிறது.மலையடிவாரத்தில், தலவிருட்சமருகே பிள்ளையாருக்கு ஒரு திருமுன் உண்டு. திருவிழாக்காலங்களில், இரவு திருவீதியுலாவைத் தொடர்ந்து, முருகப்பெருமான் திருட்டுத்தனமாக வள்ளியம்மனைச் சந்திக்கும் “மலைத்திருவிழா” நடப்பதும், குன்றிலிருந்து இறங்கும்போது, அண்ணனுக்கு வெட்கப்பட்டு தன் ஆலயம் நோக்கி ஓடுவதும், இங்குள்ள சுவாரசியம்.

கோவிலின் பலிபீடத்திற்கு முன்னே மயிலுக்குப் பதிலாக மூசிகமே தென்படுகின்றது உகந்தை மலையைப் பற்றி மட்டக்களப்பு மான்மியம் பல செய்திகளைக் கூறுகின்றது.

இங்கு மலையில் இருந்து கடலை அடையும் நீரில் சறுக்குவது மிக சுவாரசியமான ஒன்று.

கீழுள்ள புகைப்படம் 1980 களில் எடுக்கப்பட்டது.

 

தீர்த்த உற்சவம் ஒன்றின் போதான புகைப்படம்

நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Facebook Comments