நிகழ்வுகள்

இராவண தேசம் – சூறையாடப்பட்ட கேந்திர தளங்களை பற்றிய சோக கதைகள் சொல்லும் ஆய்வு நூல்

மொன்றியலில் “இராவண தேசம்”
கனடா உள்ளம் நிறுவன அனுசரணையில் தாகம் பதிப்பகத்தினால் திருமலையில் வெளியிடப்பட்ட பிரபல ஆய்வாளரும், ஊடகவியலாளருமான திருமலை நவம் அவர்களால் எழுதப்பட்ட முக்கியமான நூல் .

இராவண தேசம்
இராவண தேசம்

திருக்கோணேஸ்வரம்,கன்னியாவெந்நீரூற்றுக்கள்,கங்குவேலிஅகத்தியர்ஸ்தாபனம் என தமிழரின் முக்கிய கேந்திரங்களை காலங் காலமாக சிங்கள பேரினவாத அரசு தமிழர் பிரதேசங்களையும் தமிழர் தம் நிலங்களையும் தமிழர்களின் தொன்மையான வரலாற்று பெருமைகொண்ட வணக்கஸ்தலங்களையும் கையகப்படுத்தி எவ்வாறு தமிழ் இனத்தை சூறையாடி வருகிறது என்பதை வரலாற்று புவியியல் ரீதியாக
ஆராயும் நூல்.
நல்லாட்சி அல்ல எந்த ஆட்சி வந்தாலும் நிலை இதுதான்.அபிவிருத்தி , பாதுகாப்பு , தொல்லியல் முக்கியத்துவம் கொண்ட பகுதி , என்ற போர்வைகளின் கீழே எவ்வாறு
இம் மூன்று வரலாற்று முக்கியத்துவமும் தமிழர் தம் தொன்மையும் கொண்ட பிரதேசங்கள் கையகப்படுத்தப் பட்டுள்ளது என்பதனை வரலாற்று ஆதாரங்களுடன் அழகிய வர்ணப் படங்களுடன் ஆய்வுக்குட்படுத்தும் நூல்.
தமிழர் எல்லோரது கரங்களிலும் இருக்க வேண்டிய நூல்.
07-08-2017 அன்று தமிழர்தம் தலைநகராம் திருகோணமலை மண்ணில் வெளியிடப்பட்டது.

இராவண தேசம் ஆய்வு நூலின் அறிமுக விழா 23-09-2017 சனிக்கிழமை மாலை 4.15 மணிக்கு மட்/பொது நூலக கேட்போர் கூடத்தில் பேராசிரியர் சி.மெளனகுரு தலைமையில் நடைபெற்றது.

புலம்பெயர் உறவுகள் நூலைப் பெற்றுக்கொள்ள பின்வரும் தொலைபேசி மற்றும் e-mail மூலம் தொடர்பு கொள்ள முடியும்.
W.Michael collin
Director-Thaaham publication +94774338878
E-mail.W.michaelcollin@gmail.com

நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Facebook Comments