You are here
தலைவாசல் > Uncategorized > ஆயுத எழுத்து

ஆயுத எழுத்து

கழுத்தொடும் ஒரு ஆயுதத்தை தினம் களங்களில் சுமக்கின்றோம் !

எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை தினம் மொழியில் சுமக்கின்றோம்!

என்பது திரைப்பட பாடல். இந்த வரிகள் வணிக நோக்குடன் அதில் இணைக்கப்பட்டு இருந்தாலும் அந்த வணிக நோக்கை தாண்டி (ஃ – ஆயுத எழுத்து) என்னும் எழுத்து மீதான கவனம் திரும்பியது.இவ்வாறு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த எழுத்து பற்றிய தேடல்கள் எம்மிடையே எழும்.பின்னர் இதன் அரை மாத்திரை கால் மாத்திரை யாகி குறுக்கம் ஆனது போல அடங்கி விடும்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் ஆயுத எழுத்துக்கும் நம் தமிழின் தொன்மைக்கும் தொடர்பு இருக்கிறது என்பது உண்மை!

மூன்று புள்ளிகளுடைய எழுத்தை நாம் ஆய்த எழுத்து என்கிறோம்.
ஆய்த எழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும். இவ்வாறு தனித்து வரும் ஆற்றல் இல்லாததினால் இது சார்பெழுத்தாயிற்று.

அஃ து – ‘அ’ குறில். ‘து’ வல்லின உயிர்மெய்
இ ஃ து – ‘இ’ குறில். ‘து’ வல்லின உயிர்மெய்
எ ஃ கு – ‘எ’ குறில். ‘கு’ வல்லின உயிர்மெய்

தொல்காப்பியம் 

தமிழ் பழைய நூலான தொல்காப்பியம் தமிழில் வாக்கத்தில் இருந்த 3 சார்பெழுத்தில் ஒரு எழுத்து ஆயுத எழுத்து என சொல்கின்றது.

எழுத்து எனப்படுப
அகரம் முதல்
னகர இறுவாய் முப்பஃது என்ப
சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே.
அவைதாம்,
குற்றியலிகரம் குற்றியலுகரம்
ஆய்தம் என்ற
முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன.

‘தொல்காப்பியம்’, எழுத்திகாரம் ~ 500 B.C.

ஆயுத எழுத்து 3 புள்ளிகளைப் பெற்றிருப்பதால் இது முப்பாற்புள்ளி, முப்புள்ளி எனவும் வழங்கப்படுகின்றது.
 வேறு பெயர்கள்: ஆய்தம் (பெயர்ச்சொல்), அஃகேனம், தனிநிலை, புள்ளி, ஒற்று

திருக்குறளில் ஆயுத எழுத்து பயன்பாடு

52 ஆய்த எழுத்துக்கள் 49 குறள்களில் பயன்பட்டுள்ளன.3 குறளில் இருமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

பத்துப்பாட்டு எட்டுத்தொகை பதினெண் கீழ்கணக்கு சேர்ந்து ஒன்றாகப் பார்த்ததாலும் 348 ஆய்தம் பயன் படுத்தப்பட்டுள்ளது.

1/2 மாத்திரை ஒலி ஆய்வதால்= “ஆய்தம்” என்ற கருத்தும் உண்டு
இயல்பாக அரை மாத்திரை ஒலியளவுபெறும் ஆய்த எழுத்து, ஓசை குறைந்து கால் மாத்திரையாக ஒலிக்கும்பொழுது, “ஆய்தக்குறுக்கம்” என்ற சார்பெழுத்து ஆகிறது.

ஆய்தம் என்பது பொதுவாக, கருவி எனப் பொருள்படும். ஆயினும், போர்க் கருவிகளையே ஆய்தம் அல்லது ஆயுதம் என்றனர். போர்க் கருவிகளிலும் குறிப்பிட்ட ஒரு கருவியே ஆய்தம் எனப் பெயர்பெற்றது.
போர்வீரனின் கேடயம் இரும்பால் செய்யப்பட்டு, வட்ட வடிவ அமைப்பில் இருக்கும். அதில், பிடிப்பதற்கென ஒரு பக்கத்தில் கைப்பிடி இருக்கும். மறுபக்கம் மூன்று புள்ளிகள் (ஃ) போன்ற வடிவமைப்பில் இரும்புக் குமிழிகள் இருக்கும். இடக்கையில் உள்ள கேடயத்தால் பகைவனைத் தாக்கினால், அந்த மூன்று குமிழிகள் போன்ற வலிய பகுதிகள், பகைவன் மீது கொட்டுவதுபோல் இடித்துத் தாக்கும். அந்தக் குமிழிகள் மூன்றில் இரண்டு கீழேயும், ஒன்று மேலேயும் ஃ என்பதுபோல இருக்கும். அந்த ஆய்தம் போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பதால், இந்த எழுத்தும் அப்பெயரைப் பெற்றது.
போர் வீரர்கள் போர்க்களத்தில் பயன்படுத்திய போர்கருவிகளில் சூலமும் ஒன்று. சூலம் கூரிய முனைகள் மூன்றைப் பெற்றிருக்கும். அந்த மூன்று முனைகளை மட்டுமே நோக்கினால் முப்புள்ளியாகத் தோன்றும். சூலத்தின் முனைகள் மூன்றிலும், எலுமிச்சைப் பழங்களைச் செருகி நோக்கினால் ஃ என்பது போலக் காட்சி தருவதைப் புரிந்து கொள்ளலாம்.
தமிழில் இலக்கணப் பெயர்களும் எழுத்துகளின் பெயர்களும் காரணம் கருதியே பெயர் பெற்றுள்ளன. அவ்வாறே ஆய்த எழுத்தும் காரணம் கருதியே பெயர் (காரணப்பெயர்) பெற்றுள்ளது.

ஆயுதம்

ஆயுதம் என்னும் சொல் சங்கப்பாடல்களில் இல்லை. இந்த வரிசையில் ஆயு, ஆயுங்கால, ஆயும், ஆயுள் என்னும் 4 சொற்கள் மட்டுமே உள்ளன. (சங்கநூல் சொல்லடைவு 1967) சங்ககாலத்தில் இல்லாத ஆயுதம் என்னும் ஒரு சொல்லைக் கொண்டு ஆய்தம் என்னும் தொல்பழஞ் சொல்லுக்குக் கற்பனைப் பொருள் கற்பிப்பது சாலாது.

ஆய்தம் = ஒலி நுணுக்கம்

தமிழில் ஆய்த எழுத்து வல்லெழுத்து ஒலியை நுணுக்கம் செய்யப் பயன்படுத்தப்படும்.
“ஓய்தல், ஆய்தல், நிழத்தல், சாஅய், ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்” என்பது தொல்காப்பியம் (உரியியல்) ஆய்தல் என்னும் சொல் நுணுக்கமாக நோக்கும் ஆராச்ச்சியைக் குறிக்க இன்றும் பயன்படுத்திக்கொண்டு வருகிறோம். வலிமையான கற்களை நுணுக்கி மென்மையாக்கிக் கொள்வது போல ஆய்த எழுத்துக்களை ஊர்ந்து வரும் வல்லின எழுத்துக்களை நுண்மையாக்கிக் காட்ட இந்த ஆய்த எழுத்து பயன்படுவதை நாம் காண்கிறோம்.
தமிழில் ஆய்தல் என்றால், ஒரு விஷயத்தை மேலோட்டமாகப் பார்க்காமல் உள்ளே இறங்கிச் சென்று நுணுக்கமாக ஆராய்ச்சி செய்தல்.

இதே ‘ஆய்தல்’க்கு இன்னொரு விளக்கமும் உண்டு. பெரிய ஒரு விஷயத்தைப் பிரித்துச் சிறிதாக்குதல், அதாவது, வலிமையானதை மென்மையாக்குதல்.

உதாரணமாக, ‘கீரை ஆய்ஞ்சு கொடு’ என்று சொல்கிறோமல்லவா? இதன் அர்த்தம், பெரிய கீரைக் கட்டைச் சிறு இலைகளாகப் பிரித்தல்.

இதேபோல், ‘ஃ’ என்கிற ஆய்த எழுத்தும், வல்லின எழுத்துகளுக்கு முன்பாக வரும்போது, அதை மென்மையாக்கிவிடும், அதாவது, மெல்லினமாக்கிவிடும்.

உதாரணமாக, இந்த இரண்டு சொற்களையும் சத்தமாகச் சொல்லிப் பாருங்கள்: மக்கு, எஃகு

இரு சொற்களிலும் ‘கு’ என்ற எழுத்து இருக்கிறது. ஆனால், ‘மக்கு’ என்பதில் வரும் ‘கு’வும், ‘எஃகு’ என்பதில் உள்ள ‘கு’வும் ஒரேமாதிரி ஒலிப்பதில்லை, சொல்லிப்பார்த்தால் தெளிவாகத் தெரியும், முதல் ‘கு’க்கும், இரண்டாவது ‘கு’க்கும் நம் வாய் திறக்கிற விதம், நாக்கு மடங்குகிற விதம் மாறுபடும்.

இதற்குக் காரணம், ‘எஃகு’ என்பதில் உள்ள ‘ஃ’தான். ’கு’ என்ற வல்லின எழுத்தைக் கொஞ்சம் மாற்றி, மெல்லினம்போல் ஒலிக்கச் செய்துவிடுகிறது.

நுட்பமான இந்தக் காரணத்தால், ஆய்கிற / மென்மையாக்குகிற எழுத்து என்ற அர்த்தத்தில் அதனை ‘ஆய்த எழுத்து’ என்று அழைத்தார்களாம்.

முற்றாய்தம்

எஃகு, கஃசு, கஃடு, பஃது, பஃறி என்னும் சொற்களில் ஆய்த எழுத்து அடுத்துள்ள வல்லின எழுத்தை மென்மையாக்கிக் காட்டுவதை இவற்றை ஒலித்துப் பார்த்து உணர்ந்துகொள்ளலாம். இவற்றில் ஆய்த எழுத்துக்கு இயல்பான அரை மாத்திரை. எனவே இதனை முற்றாய்தம் எனக் குறிப்பிடலாயினர். ஆய்தம் தன் மாத்திரையில் குறுகும் ஆய்தக் குறுக்கம் இருப்பதை வேறுபடுத்திக் காட்ட முற்றாய்தம் என்னும் சொல் தோன்றியது. சார்பெழுத்து என்பதிலிருந்து தெளிவுபடுத்திக்கொள்ள முதலெழுத்து என்னும் சொல்லை நன்னூல் வழக்குக்குக் கொண்டுவந்தது போன்றது இது.

ஆய்தக் குறுக்கம்

(கல்+தீது) கஃறீது, (முள்+தீது) முஃடீது, (அவ்+கடிய) அஃகடிய –எனப் புணர்ச்சியில் வரும் ஆய்தவெழுத்து ஆய்தக் குறுக்கம்.

வடமொழி ஒலி ஒப்பீடு

சமற்கிருதத்தில் (வடமொழியில்) இந்த ஒலியெழுத்தை அஹ என ஒலிப்பர். இந்த மொழியில் இந்த ஒலி மொழியின் இறுதி ஒலியாக வரும். தமிழில் இந்த ஒலி இறுதி ஒலியாக வராது. வல்லின எழுத்துக்கள் ஆறும் ஊர்ந்துவரும் நுண்ணொலி எழுத்தாக இடையில் மட்டுமே வரும்.
தற்போது மொழி நடையானாலும் சரி ,எழுத்து நடையானாலும் சரி ஆயுத எழுத்து பாவனை அறவே இல்லை என்று சொல்லுமளவு,குறைந்தே விட்டது.இது தற்செயலாக நடந்து இருக்க முடியாது.இந்த எழுத்தின் பாவனையை அகற்றுவதன் மூலமாக மொழின் இயலுமையை குறைக்க எதோ ஒரு தரப்பு மோய்சித்து இருக்க வேண்டும்!
அதே போல காரணம் இன்றி தேவை இன்றி இந்த எழுத்து மொழியில் சேர்க்கப்பட்டு இருக்காது.
‘அ’கரத்தையும் ‘ழ’கரத்தையும் மட்டுமல்ல ஆயுதத்தையும் தமிழ் உடன் சுமந்தே வந்துள்ளது.
அதனால் இந்த எழுத்து பற்றிய கலந்துரையாடல்களும் தேடல்களும் கண்டிப்பாக தேவையாக இருக்கிறது.

“மொழியில் தொலைத்த ஆயுதத்தை தேடுவோம்”

 ஆயுத எழுத்து பயன்படுத்தப்பட்ட திருக்குறள்கள்
38
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்
 
49
அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று
 
76
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அதே துணை
80
அன்பின் வழியது உயிர்நிலை அதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
 
132
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை
 
162
விழுப்பேற்றின் அதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்
 
170
அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅது இல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்
 
1.2.14
வெகாமை
 
171
நடுவின்றி நன்பொருள் வெகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்
 
172
படுபயன் வெகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்
 
173
சிற்றின்பம் வெகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்
 
174
இலமென்று வெகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்
 
175
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெகி வெறிய செயின்
 
176
அருள்வெகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்
 
177
வேண்டற்க வெகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்
 
178
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்
 
179
அறனறிந்து வெகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு
 
180
இறலீனும் எண்ணாது வெகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு
 
220
ஒப்புரவினால்வரும் கேடெனின் அதொருவ
விற்றுக்கோள் தக்க துடைத்து
226
அற்றார் அழிபசி தீர்த்தல் அதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி
 
236
தோன்றின் புகழொடு தோன்றுக அதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
 
242
நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான்
தேரினும் அதே துணை
 
262
தவமும் தவம்உடையார்க்கு ஆகும் அவம் அதனை
துஇலார் மேற்கொள் வது
 
363
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டுஇல்லை
ஆண்டும் அதொப்பது இல்
 
368
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்
 
414
கற்றில னாயினுங் கேட்க அதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை
 
427
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
தறி கல்லா தவர்
 
459
மனநலத்தின் ஆகும் மறுமைமற் றதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து
 
476
நுனிக்கொம்பர் ஏறினார் அதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்
 
536
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்
541
ஒர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வதே முறை
556
மன்னர்க்கு மன்னுதல் செங்கோண்மை அதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி
 
572
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அதிலார்
உண்மை நிலக்குப் பொறை
 
575
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அதின்றேல்
புண்ணென்று உணரப் படும்
 
591
உடையர் எனப்படுவது ஊக்கம் அதில்லார்
உடையது உடையரோ மற்று
 
600
உரமொருவற்கு உள்ள வெறுக்கை அ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு
 
621
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அதொப்ப தில்
 
759
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
கதனிற் கூரிய தில்
 
773
பேராண்மை என்ப தறுகண்உன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எகு
943
அற்றால் அறவறிந்து உண்க அதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு
 
971
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
திறந்து வாழ்தும் எனல்
1001
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்
 
1014
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை
 
1032
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து
 
1037
தொடிப்புழுதி கசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்
 
1093
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அதவள்
யாப்பினுள் அட்டிய நீர்
 
1161
மறைப்பேன்மன் யானிதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்
 
1166
இன்பம் கடல்மற்றுக் காமம் அதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது
 
1279
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
தாண் டவள்செய் தது
1308
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அதறியும்
காதலர் இல்லா வழி

Leave a Reply

Top