மிக முக்கிய பதிவுகள்

அறை 39 உம் ரகசியமும் – ஹிட்லர் – புலிகள் – வடகொரியா

ஜேர்மனிய ஹிட்லர் – தமிழீழ விடுதலை புலிகள் – வடகொரியா என அழிக்கப்பட,அழிக்கப்பட வேண்டும் என்று நினைக்கப்பட காரணம் பல இருந்தாலும் பணம் (அறை 39 உம்) என்ற ஒன்றும் காரணம்.

என்ன பணமா? உலக நாடுகளிடம் இல்லாத பணமா ? என்று நீங்கள் கேட்பது புரிகின்றது.
பணம் வைத்து இருந்தார்கள் என்பதல்ல விடயம்.பணப்புழக்கத்தை பண பரம்பலை மாற்றீடுகள் எவ்வாறு கையாண்டார்கள் என்பது தான் சிக்கல்.

இன்று உலகின் பல நாடுகள் பல நாணயங்களை பயன்படுத்தினாலும் அந்த நாணயத்தை எல்லாம் அச்சடிப்பது குறித்த ஒரு வங்கி தான். Rockefeller வங்கி தான் அது இது குறித்த நாட்டின் அரசின் உடையது அல்ல.ஒரு தனிப்பட்ட சந்ததி உடையது(Rockefeller என்பவரின் சந்ததிக்கு சொந்தமானது).

இது போக பல நாட்டு நாணயங்கள் அமெரிக்க டொலர் ,மற்றும் யூரோக்களின் சார்பு அடிப்படையில் பல நாடுகளின் பொருளாதாரம் ஒரு கட்டுக்குள் வைத்திருக்கப்படுகின்றது.

ஹிட்லர் கூட எந்த புற நாட்டு நாணயங்களை பயன்படுத்துவதில்லை எனவும் சுய நாணயத்தின் பாவனையையும் அதிகரிக்க பல முனைப்புகள் மேற்கொண்டார்.

விடுதலைப் புலிகள்

 

தமிழீழ விடுதலை புலிகள் தங்கத்தை அடிப்படையாக கொண்ட நாணய புழக்கம் ஒன்றை ஏற்படுத்த முனைந்தனர் .அதை நடைமுறைப்படுத்தியும் இருந்தனர்.

இவை வெறும் முளைகளாய் இருந்தாலும் வல்லூறுகள் இவற்றை முளையிலே கிள்ளி எறிவதில் கவனமாய் இருந்தது.இருக்கிறது.இருக்கும்.

 

 

இப்போது பேசு பொருள் வட கொரியாவும் அறை எண் 39 .

அறை 39
அறை 39

அப்படி என்ன இருக்கிறது அறை எண் 39 ல் ?

யாருக்கும் நிஜம் தெரியாவிட்டாலும் ரெண்டு கருத்து நிலவுகின்றது
1) அமெரிக்க கள்ள டொலர்களை அசல் போலவே (அசலாகவே ) அச்சடிக்கின்றது.
2)தனக்கென பணத்தை அளவு கணக்கு இன்றி விதிகளை மீறி அச்சடிக்கின்றது.

ரெண்டுமே அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு ஆப்பு தான் .எந்த பொருளாதார தடை விதித்தாலும் வடகொரியா கள்ள டொலர் இருந்தாலோ /தனக்கென புறபாதிப்பு இல்லாத நாணய நடைமுறையை வெற்றிகரமாக கொண்டு வந்தாலோ தாக்கு பிடிக்கமுடியும்.

கண்டிப்பாக அறை 39 என படும் இடத்தில் ஆய்வு கூடமோ /ஆயுத களஞ்சியமோ இருக்க வாய்ப்பு இல்லை.ஏனெனின் அறை 39 இல் என்ன நடக்குது என சரியாக தெரியாதே ஒழிய அரை 39 இன் அமைவிடம் உலகுக்கே தெரியும்.

பியங்கியாங்கின் தொழிலாரளர் கட்சி அலுவலக கட்டிடத்தில் தான் இருக்கின்றது இந்த இடம்

எப்படியோ தனி சர்வாதிகாரி இருப்பதை விட குட்டி குட்டி சில அதிகாரங்கள் இருப்பதே மேலது..

உலகின் ஆயுத ,அணுகுண்டு ,படை பலங்களை விட
பொருளாதார ஆதிக்க பலம் எந்த காலத்திலும் இருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

இவ்வாறு ஒரு சிறு தேசமா ?ஒரு இனமோ ?ஒரு புரட்சி தரப்போ முயற்சி செய்யும் போது நிச்சயமாக அழிக்கப்படுவார்கள் வேறு போர்வைகளில்.